Tuesday, 24 September 2013

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா மீதான இலாகாபூர்வ விசாரணை ரத்து IAS officer Durga Inquiry revoked by UP govt

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா மீதான இலாகாபூர்வ விசாரணை ரத்து IAS officer Durga Inquiry revoked by UP govt
Tamil NewsYesterday

லக்னோ, செப். 25-

உத்தரபிரதேச மாநிலம் கவுதமபுத்தா நகர் மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் மணல் கடத்தும் கும்பல் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் மசூதியின் சுற்றுச்சுவரை இடித்து, கலவரம் உருவாக காரணமாக இருந்ததாக கூறி அவரை உத்தரபிரதேச அரசு கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கைக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடு முழுவதும் பரபரப்புக்கு உள்ளாகியது. இந்த நிலையில் துர்கா நாக்பால் மீண்டும் கடந்த 22-ந் தேதி அன்று பணி அமர்த்தப்பட்டார். இதை அடுத்து அவர் தனது கணவருடன், முதல்மந்திரி அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் துர்கா நாக்பால் மீதான இலாகா பூர்வ விசாரணையை முடித்துக் கொள்வதாக உத்தரபிரதேச அரசு நேற்று அறிவித்தது. இத்துடன் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger