உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் திமுக தனது வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிடுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக திமுக ஏற்கனவே அறிவித்து விட்டது. இதனால் நட்டாற்றில் விடப்பட்ட காங்கிரஸ் கட்சி என்ன செய்வது என்று தெரியாமல் பல கோஷ்டிகளாகப் பிரிந்து கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளர்கள், நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் குறித்து திமுக தலைமை ஆலோசனை நடத்தி வந்தது. இதையடுத்து தற்போது வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர்.
இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார். அப்போது 9 மாநகராட்சிகளுக்கான மேயர் வேட்பாளர்கள் மற்றும் 125 நகராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அவர் வெளியிடுவார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?