அந்த காலம் மாதிரி இல்லை... எல்லாம் சீரழிந்து வருகிறது என்பது எப்போதும் வழங்கி வரும் ஒரு நிரந்தர புலம்பல்... ஆனால் சில விஷ்யங்களில் நிலை மாறி வருகிறது என்பது இனிமையான செய்தி...
மூத்தவர்களை விட , இளைய சமுதாயத்தினர் பல விஷ்யங்களில் தெளிவாக இருக்கின்றனர்.. முன் எப்போதையும்விட தமிழ் ஆர்வம அதிகரித்து இருப்பதும், தமிழ் மொழிக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு இருப்பதும் தெரிகிறது... இணையத்தில் புது புது தமிழ் வார்த்தைகள் அறிமுகம் ஆகிக்கொண்டு இருக்கின்றன.. இந்த நல்ல செயலில் பெரும் பங்கு வகிப்பவர்கள் இளைஞர்கள்தான் ..
தூய தமிழை பயன்படுத்துதல் என வரும்போது ஒரு சிக்கல் வருகிறது... எது தூய தமிழ் என்பதே அது,
உதாரணமாக , நாவாய்ப்படை என்பது ஆங்கிலத்தில் இருந்து ( நேவி ) தமிழுக்கு வந்தது என சிலர் தவறாக நினைக்கின்றனர்,.. உண்மையில் நாவாய் என்பது அந்த காலத்திலேயே வழக்கில் இருந்த சொல்... இது போன்ற தவறான கருத்துக்களால் தமிழின் சில சொற்கள் தம் பெருமையை இழக்க வேண்டி இருக்கின்றன.. அதே நேரத்தில், உண்மையிலேயே அன்னிய சொற்கள் சிலவும் கலந்து இருக்கின்றன என்பதும் உண்மை..
இப்போதைய கேள்வி , நாழிகை என்பது தமிழ் சொல்லா?
நண்பர் பிலாசபி பிராபாகரனுடன் நேரில் பேசுவது வேறு அனுபவம். ஆனால் அவர் எழுத்தில்தான் அவரது முதிர்ச்சி , விஷ்ய ஞானம் அதிகம் தெரியும். அப்படிப்படவர், விபரங்கள் தெரிந்தவர் , இந்த சந்தேகம் எழுப்புகிறார் என்றால் அது நியாயமான சந்தேகம்..
நாழிகை என்ற சொல் இன்றும் பயன்படுகின்ற தமிழ் சொல்தான்.. ஆனால் இதை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்தான் பயன்படுத்துகிறார்கள்.. எனவே இந்த வார்த்தை , சம்ஸ்கிருத வார்த்தையோ என்ற சந்தேகம் எழுவது இயல்பானது.. எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது ஒரு காலத்தில்..
ஆக மூன்று கேள்விகள்...
1 அந்த காலத்திலேயே , நேர கணக்கீடு தமிழகத்தில் இருந்ததா?
2. நாழிகை என்ற அளவு இருந்ததா?
3. இப்போது ஏன் இந்த சொல் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் வார்த்தையாக மாறி விட்டது ? ( கொஞ்ச நாழில வந்துறேன் என சொல்வது வெகு சிலரே )
***************************************************
நிமிடம் , நொடி போன்றவை அந்த காலத்திலேயே இருந்தன,.. ஆனால் அந்த நொடி, நிமிடங்களின் வரையறை இப்போது பயன்பாட்டில் இருக்கும் நொடி, நிமிடம் என்ற சர்வதேச வரையறையில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும்...
ஒரு மீட்டர் , ஒரு கிலோ என்றால் , எந்த நாட்டிலும் அதே அளவாக இருக்க வேண்டும் என்பதால்தான், சர்வதேச வரையறைகள் பின்பற்று வருகின்றன...
நிமி என்றால் இமை... கண் இமைப்பை அடிப்படையாக கொண்டு காலம் கணக்கிடப்பட்டதால் நிமையம் , நிமிடம் என அந்த வார்த்தை உருவானது... ஒன் நிமிட்ல ( மினிட்ல ) வந்துறேன் என சிலர் பேசும் ஆங்கிலம் மூலம், மினிட் என்ற ஆங்கில வார்த்தைதான் தமிழாகி விட்டது என நினைப்பது தவ்று..
அந்த காலத்தில் காலம் அறியும் கருவியை கழுத்தில் அணிவது வழக்கம்... கடிகை ஆரம் என காரண பெயர் பெற்று, கடிகாரம் என்றானது... சிலர்சரி, தனிப்பட்ட உபயோகத்துக்கு கடிகை ஆரம் .. பொதுவாக வைக்கப்ப்டும் ( சுவர் கடிகாரம், மணி கூண்டுகள் போன்றவற்றுக்கு ) என்ன பெயர்இந்த பயன்பாடுக்குத்தான் அந்த காலத்தில் நாழிகை வட்டில் எனும் கருவியை பயன்படுத்தினர்...இதற்கான ஆதாரங்கள் நம் இலக்கியங்களில் உள்ளன..
நாழிகை கணக்கர்கள் என சிலர் இருந்தனர்.. நேரத்தை அவ்வப்போது மணி ஓசை மூலமோ, குரல் மூலமோ அரசவையில் அறிவித்து கொண்டு இருப்பது இவர்கள் வேலை..
பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது கான்கையர் தோன்ற வாழ்த்தி
எறினீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறுனீர்க்கன்னல் இணைத்தென்று இசைப்ப
என்ற முல்லைப்பாட்டு இதைத்தான் சொல்கிறது..
இதில் வரும் குறு நீர் கன்னல் என்பதுதான் நேரம் காட்டும் கருவி.. பொய் பேசாத நாழிகை கணக்கர்கள், மன்னனை வாழ்த்தி நேரம் இசைப்பார்கள் என்பது இதன் அர்த்தம்..
வேதாளிகரோடு நாழிகை இசைப்ப
இமிழ் முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப
என்று மதுரை காஞ்சி படம் பிடித்து காட்டுகிறது
இந்த பழம் பாடலை பாருங்கள்..
முரியும் வெண்டிரை முதுகயம் தீப்பட முழங்கழ லெரியம்பின்
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என்செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணைநெடுங் கண்துயிலா
கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமா றறியேனே
சூரியன் அஸ்தமித்த இரவு வேளையிலும் தூக்கம் வரவில்லை என்பது சுருக்கமான பொருள்... சூரியனுக்கு அழகு தமிழில் வெங்கதிர் , அஸ்தமனத்துக்கு துயின்றது என சொல்லும் பாடல், நேரத்தை சொல்லும் நாழிகையை வேறு மொழியில் இருந்து எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவு..
ஆக சமஸ்கிருத கலப்பு ஆரம்பமாகும் முன்பே, ஆங்கிலம் உருவாவதற்கு முன்பே , தமிழர்கள் காலம் காட்டும் கருவிகள் பயன்படுத்தியதும், நாழிகை வட்டில் பயன்படுத்தியதும் தெரிகிறது..
ஒன்பதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட , ஓர் அழகிய தமிழ் பாட்டை பாருங்கள் ( ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான சூளாமணியில் இருக்கிறது )
இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்
பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி
என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்
கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்
சங்க பாடல்கள் முதல், ஒன்பதாம் நூற்றாண்டு பாடல்கள் வரை, இந்த சொல் பயன்பாட்டில் இருந்து வருவது தெரியும்
ஆனால் நாழிகை என்பது ஏன் சிலரின் வார்த்தையாக உள்ளது?
அந்த காலத்தில்,, 6 மணி, முப்பது நிமிடம்,.20 வினாடி. ஆறு நொடி என துல்லியமாக தெரிந்து கொண்டு வேலை செய்யும் தேவை பெரும்பாலாருக்கு இல்லை...
உலோகங்களை காய்ச்சி ஊற்றும் உலோகவியலில் இந்த தேவை இருந்தது... ஆனால் இந்த துறைக்கும் பொது மக்களுக்கும் சம்பந்தம் இல்லை..
பொது மக்களுக்கு நெருக்கமான ஜோதிட துறையில், துல்லியமான நேர கனக்கு அவசியம்.. எனவே ஆன்மீகம் , ஜோதிடம் சார்ந்தவர்கள் மட்டுமே நாழிகை என்ற சொல்லை பயன்படுத்தினர்..
காலப்போக்கில் அது குறிபிட்ட மக்களின் வார்த்தையாக மாறியது இப்படித்தான்..
மற்றபடி சம்ஸ்கிருதத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை..இல்லை... இல்லவே இல்லை
http://tamil-friend.blogspot.com
http://tamil-friend.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?