கோவையில் வருகிற 25 - ந் தேதி தே.மு.தி.க. 7 - ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது என்றும், இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விஜயகாந்தை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பஸ் நிறுத்தத்தில் மிகப் பெரிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த பேனரை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் பிளடோல் கிழித்து சேதப்படுத்தி விட்டனர்.
இந்த தகவல் கிடைத்ததும் தே.மு.தி.க. வினர் 50 - க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு உருவானது. பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் அங்கு பதட்டம் நிலவுகிறது.
விஜயகாந்த் வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்டதற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?