ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கான அதிமுக வேட்பாளர் மல்லிகா பரமசிவம், விபச்சார வழக்கில் சிக்கி கைதானவர் என்று கூறி ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மனோகரன், பழனிச்சாமி, மல்லிகா பரமசிவம் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் ஆதரவு பெற்ற மல்லிகாவுக்கு சீட் கிடைத்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஈரோட்டின் பல பகுதிகளில் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், 1999ம் ஆண்டு விபச்சார வழக்கில் சிக்கிய ஈரோடு மாநகராட்சி மேயர் அதிமுக வேட்பாளரா? சிந்திப்பீர்! குற்ற எண் 682/99 என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இதுகுறித்து மல்லிகா தரப்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து சூரம்பட்டியைச் சேர்ந்த சிலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மல்லிகா கூறுகையில், போஸ்டர்கள் ஒட்டப் போவது குறித்து முன்பே எங்களுக்குத் தகவல் தெரிந்து கட்சி மேலிடத்திடம் தெரிவித்து விட்டோம். இந்த நிலையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மாற்றுக் கட்சியினருடன் இணைந்து அதிமுகவினர் சிலரே இதைச் செய்துள்ளனர்.
நான் இதுபோன்ற தவறான செய்கைகளில் ஈடுபடும் பெண் அல்ல என்றார் அவர்.
இந்த போஸ்டர் போரால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?