கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளைக் கேட்டு வருகிறாராம்.
கமலிடம் இப்போது இரு இயக்குநர்களின் ஸ்கிப்டுகள் உள்ளதாகவும், இவற்றில் எதை முதலில் அவர் ஓகே செய்வார் இரு இயக்குநர்களும் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அந்த இருவர் இயக்குநர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி. லிங்குசாமியின் ஸ்கிப்டுக்கு கமலிடமிருந்து இதுவரை எந்த ரீயாக்ஷனும் இல்லையாம். ஆனால் ஷங்கரின் கதை பிடித்திருப்பதாக கமல் கூறியுள்ளாராம்.
எனவே லிங்குசாமி இப்போது வேட்டை முடிந்ததும், விஷாலை வைத்து படம் பண்ணப் போகிறாராம். அதே நேரம் கமல் படத்திலும் அவர் இருப்பாராம். எப்படி? ஒரு தயாரிப்பாளாராக.
ஷங்கர் இயக்க, கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்கக் கூடும் என்கிறார்கள், வேட்டை இசை விழாவுக்கு ஷங்கர் வந்ததை வைத்து.
தமிழ் சினிமாவில் எந்தக் கணிப்பும் மாறலாம்... அதுவும் கமல் விஷயத்தில் பல கணிப்புகள் பொய்யாய் போயிருக்கின்றன. தனக்கு சரி எனப் படும் வரை எதற்காகவும் சமரசமாகாத கலைஞர் அவர். எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?