பாடல், நடனம், நடிப்பு, இயக்கம் என திரைத்துறையில் பல தளங்களில் இயக்கும் சிம்பு, அடுத்தது உலக அமைதிக்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அன்புக்கான பாடலாக, உலகத்தின் Love Anthem- ஆக அது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அப்பாடல் முன்னோட்டத்தை கேட்க....
The world Love Anthem - Str (audio teaser) by Str Simbuதனது ஃபேஸ்புக் இணையத்தில் அவர், " சிலர் 2012-ல் உலகம் அழிந்துவிடும் என நம்புகிறார்கள். இருக்கலாம். அன்புக்கு பஞ்சம் பெருகுவதால், உலகம் முடிவுக்கு வந்துவிடலாம்.
நாம் அன்பை பரிமாறிக்கொள்வதில் மொழி தடையாக இருக்கிறது.
96 மொழிகளையும் பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு..
சீக்கிரம் வருகிறது.. உலகத்துக்கான Love Anthem ! " என்று தெரிவித்துள்ளார்.
காத்திருப்போம்.. கேட்க !
அப்பாடல் முன்னோட்டத்தை கேட்க....
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?