Thursday 15 March 2012

ரயில்வே பட்ஜெட் 2012: முக்கிய அம்சங்கள்

 
 
புறநகர் ரயில் கட்டணங்களும் கி.மீக்கு 2 பைசா உயர்வு
 
பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ. 5 ஆக உயர்வு
 
3வது வகுப்பு ஏசி பெட்டிகளில் கட்டணம் கிலோமீட்டருக்கு 10 பைசா உயர்வு
 
ஏசி முதல் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 30 பைசா உயர்வு
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2013-ல் முடிவடையும்
 
ஏசி, முதல் வகுப்பு கட்டணமும் உயர்வு
 
கிலோமீட்டருக்கு 2 முதல் 30 பைசா வரை கட்டணம் உயர்வு
 
300 கி.மீக்கு மேல் கட்டணம் ரூ. 12 வரை உயர்வு
 
10 ஆண்டுகளுக்குப் பின் ரயில் கட்டணம் முதன்முறையாக உயர்வு
 
2ம் வகுப்பு ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்வு
 
மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகள்
 
ரயில்வே விளையாட்டுவீரர்களுக்கு ரயில் கேல் ரத்னா விருது
 
1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
 
75 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 21 பயணிகள் ரயில்கள் அறிமுகம்
 
ரயில்வே துறை செலவுகளை 10% குறைக்க திட்டம்
 
இதுவரை எந்த உருப்படியான அறிவிப்பும் ரயில்வே பட்ஜெட்டில் இல்லை
 
சோனியா குடும்பத்தின் ரே பரேலி தொகுதியில் ரயில் பெட்டி தொழிற்சாலை
 
12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரயில்வே துறை ரூ 3.5 லட்சம் முதலீடு செய்ய திட்டம்
 
விபத்து சதவீதம் 0.77ல் இருந்து 0.55% ஆகக் குறைந்துள்ளது
 
லாலு பெயரை குறிப்பிடாத ரயில்வே அமைச்சர். லாலு கட்சி எம்பிக்கள் கோஷம்
 
வரும் நிதியாண்டில் 20,000 வேகன்கள் தயாரிக்கப்படும்
 
டபுள் டக்கர் ரயில்வே கன்டெய்னர்கள் தயாரிக்க திட்டம்
 
சுய அதிகாரம் கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர்
 
ரயில்வே ஆராய்ச்சி, மேம்பாட்டு கவுன்சில் அமைக்க பரிந்துரை
 
உருப்படியான அறிவிப்புகள் இல்லை என எதிர்க் கட்சி எம்பிக்கள் கோஷம்
 
ரயில்களின் சராசரி வேகத்தை 160 கி.மீயாக உயர்த்த திட்டம்
 
5 ஆண்டுகளில் அனைத்து ரயில்வே கிராசிங்களும் நீக்கம். அனைத்திலும் மேம்பாலங்கள் அமைக்கப்படும்
 
ரயில்வே துறைக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி தேவை
 
2012-13ம் ஆண்டில் ரயில்வேதுறைக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 60,000 கோடி
 
அணு விஞ்ஞானி அனில் ககோட்கர் தலைமையில் ரயில்வே பாதுகாப்புக்கு குழு
 
487 திட்டங்களுக்கு உடனடி நிதி தேவை
 
புதிய சிக்னல்கள் அமைக்க, சிக்னல்களை மேம்படுத்த ரூ. 39,111 கோடி
 
புதிய ரயில்களை அறிமுகப்படுத்த புதிய டிராக்குகள் தேவை
 
19,000 கி.மீ நீள தண்டவாளங்களை நவீனமாக்க திட்டம்
 
ரயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ. 25,000 கோடி ஒதுக்கீடு. நிதி தேவையோ ரூ.45,000 கோடி
 
கேரளா உள்பட 4 இடங்களில் புதிய ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை
 
சென்னை ராயபுரம் ரயில் நிலையம் புதிய முனையமாக்கப்படும்
 
அனைத்து ரயில் நிலையங்களும் விமான நிலையங்களைப் போல மேம்படுத்தப்படும்
 
ரயில் நிலையங்களை மேம்படுத்த புதிதாக ரயில்வே நிலைய மேம்பாட்டுக் கழகம் அமைப்பு
 
நாடு முழுவதும் 11,250 ரயில்வே பாலங்கள் மேம்படுத்தப்படும்
 
19,000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் சீரமைக்கபப்டும்
 
அனைத்து சிக்னல்களும் நவீனமயமாக்கப்படும்
 
பயணிகள் பாதுகாப்புக்கு புதிய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்
 
40% ரயில் விபத்துகள் ஆளில்லா ரயில்வே கேட்களில் தான் நடக்கின்றன
 
ரயில் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும்
 
12வது திட்ட காலத்தில் ரயில்வே மேம்பாட்டுக்கு ரூ. 7.35 லட்சம் கோடி ஒதுக்கீடு
 
நவீனமயாக்கல் குறித்து ஆராய சாம் பித்ரோடா தலைமையில் குழு
 
ரயில்வே பாதுகாப்புக்கு ரூ. 16,842 கோடியில் திட்டம்
 
ரயில்வேயை நவீனமயமாக்க அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடி தேவை
வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீரை இணைக்க புதிய திட்டங்கள்
 
பட்ஜெட்டில் கவிதைகளை பாடி நேரத்தை கடத்தும் அமைச்சர் திரிவேதி



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger