கச்சதீவுக்கு அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டு வரும் செயல் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய்க்கும் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ள நிலையில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன், இலங்கை வருவதற்கு முன்னர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்துள்ளதுடன், இச்சந்திப்பின் போது பிரதானமாக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது தமிழக மீனவர்களைத் தாக்கி வரும் செயல் குறித்து முதலமைச்சர் கடுமையாகப் பேசியதுடன், இந்தப் பிரச்சினையை இந்திய அரசு தேசியப் பிரச்சினையாக அணுக வேண்டும், இந்தப் பிரச்சினையில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மண்டபம் பகுதியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு தாக்கப்பட்டு விட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?