நோர்வேயில் உள்ள உற்றயா தீவில் ஆயுதம் ஏந்திய நோஸ்க் பயங்கரவாதி ஒருவரினால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் திரைப்படமாக வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க திரைப்பட தயாரிப்பு துறையினர் இந்த சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். உற்றோயா ஐலன்ட் என்ற பெயரில் தயாராகிறது.
இதற்கான ரெய்லர் யூருப்பில் வெளியாகியுள்ளது. வெள்ளை நிற தலைமுடியுள்ள இளைஞன் ஒருவன், நோஸ்க் போலீசாரின் சீருடை அணிந்து இளைஞர்களை சுட்டுத்தள்ளும் காட்சிகளுடன் இது வெளியாகியுள்ளது. உற்றயா தீவில் நடைபெற்ற இந்த மனநோய் அனர்த்தத்தில் குடும்பங்களை பறி கொடுத்தவர்கள் தமது குடும்பத்தினர் பலியான பரிதாபக் காட்சிகள் திரைப்படமாவதை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
மேலும் நோஸ்க் போலீசார் இந்தத் திரைப்படம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியானதை நீக்கும்படி கேட்டுள்ளார்கள். நோஸ்க் ஆபைட்ஸ் கட்சியின் இளையோர் பிரிவினரே இந்த அனர்த்தத்தில் உயிர் கொடுத்தவர்கள். ஆகவே இக்கட்சியினரும் இதற்கு கடும் எதிர்ப்புடையோராக உள்ளனர்.
மேலும் திரைப்படத்தை தயாரிப்பவர்களைத் தடுப்பதற்கு இவை போதுமான எதிர்வினையாகத் தெரியவில்லை. அதேவேளை இக்கதையையே சிறிய மாற்றங்களுடன் கற்பனை போல தயாரிக்கப்பட்டால் தடுப்பது சிரமாகிவிடும். ஆனர்ஸ் பிறீவிக் என்ற நோஸ்க் இளைஞனால் இந்தத் தீவில் பிள்ளைகள் உட்பட 69 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?