திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதி மற்றும் மேயர் வேட்பாளர் ஜெயாவை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பெரியார் சிலை பஸ் ஸ்டாண்ட் அருகே பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், ''சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படும்.
கடந்த தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடந்தது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் தி.மு.க.,வினர் சூறையாடினர்.
கடந்த 4 மாதங்களில் தமிழகம் அமைதிப்பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு புகாரில் சிறையில் உள்ள நேருவின் அராஜகங்களை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும். 17431 நில அபகரிப்பு புகார்கள் போலீசாரிடம் வந்துள்ளது. இதில் 718 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
255 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.,விற்கு ஓட்டுப்போட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்'' என்று பேசினார்.
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?