ஆர்ப்பரிக்கும் ஆழி அலை போல
அந்த ஒற்றை பனை மரத்தை சுற்றி...
அதுவும் உன்னோடு
ஏன் "எரிந்து" போகவில்லை
நம் காதலுக்கு சாட்சி சொல்ல
நீ விட்டு போனாயா...
ஓங்கி அடிக்கும் உன் நினைவுகளை
பகிர்ந்து கொள்ள எனக்காக நீ.....
விட்டு சென்ற அந்த ஒற்றை பனை மரத்தை
காலம் இன்னும் அழிக்கவில்லையடி
என் மனதில் உள்ள காயம் போல....
இன்று என் பிள்ளைகளுக்கும் தெரியும்
அந்த ஒற்றை பனை மரத்தை....
அதை கடக்கும் போதெல்லாம் என்
மகள் சத்தமாகவே சொல்கிறாள்
இது என் டாடியின் முன்னாள்
காதலி வாழ்ந்த இடமென்று.....!!!
அக்கணம் பொங்கும் உன் நினைவு
கண்ணீராய் வெளி கொண்டு
வர முடியவில்லை....
காரணம் நான் அழக்கூடாது என
நீ வாங்கி கொண்ட சத்தியம்....!!!!!!!!
உனக்காக கண்ணீரை உள்வாங்கும் காதலன், பனிரெண்டு வருஷம் கழித்தும் மறுபடியும் சொல்கிறேன் என் தேவதையே, என் கண்ணில் கண்ணீர் வெளியே வராது உனக்காக.......!!!!
என் இதயம் உன்னை இன்று தேடுகிறது வா.........
நீ ஒரு சுயநலவாதியாடி....?
என் இதயம் உன்னை இன்று தேடுகிறது வா.........
நீ ஒரு சுயநலவாதியாடி....?
நம் காதலுக்காக
உன்னை மட்டும் எரித்து
என்னை கொன்றாய்....?!!!
அந்த சத்தியத்தை
திரும்ப வாங்குடி
அழமுடியாமல்
நெஞ்சு முட்டுகிறது...!!!
தினம் நீ வரும்
கனவிலாவது
அதை வாபஸ் வாங்கு
மனசு நாள் முழுவதும் எரிகிறது உன் நினைவில்...!!!
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?