Saturday, 7 September 2013

ராகுல் தலைமையின் கீழ் பணியாற்ற மிக்க சந்தோஷம்: பிரதமர் மன்மோகன் சிங் PM Singh Will be very happy to work under Rahul s leadership

பிரதமர் மன்மோகன் சிங் (80), ரஷ்யாவில் நடைபெற்ற இரண்டு நாள் ஜி.20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட அவர் விமானத்தில் பேட்டியளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க ராகுல் காந்தி எதிர்பார்க்கப்படுகிற நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு மன்மோகன் சிங் பதில் அளித்து பேசினார்.
>
> அப்போது ராகுல் குறித்து அவர் கூறியதாவது:-
>
> வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறந்த தேர்வாக இருப்பார். இதையே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரசில் பணியாற்றுவதில் மிக்க மகிழ்சி அடைவேன்.
>
> அரசியலில் எந்த ஒரு கட்சியும் நிரந்தர எதிரியாகவும் நிரந்தர நண்பனாகவும் இருந்ததில்லை. அப்படியிருக்கையில் கூட்டணி குறித்து எந்த கட்சியையும் நான் புறந்தள்ளவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்த்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறோம்.
>
> ஒத்த சிந்தனையுடைய, மதசார்பற்ற மக்களின் நலனுக்காக  நாட்டில் மதசார்பற்ற கட்சியான காங்கிரஸ் மீண்டும் பணியாற்ற விரும்புகிறது.
>
> இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger