Sunday, 20 October 2013

டெல்லி வாக்காளர்களிடம் வீடுவீடாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டுவேட்டை Aravind Kejriwal takes door to door campaign in Delhi

டெல்லி வாக்காளர்களிடம் வீடுவீடாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டுவேட்டை Aravind Kejriwal takes door to door campaign in Delhi

புதுடெல்லி, அக்.21-

டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போதைய டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

பழைய டெல்லி பகுதியில் உள்ள வாக்காளர்களை நேற்று (ஞாயிறு) வீடுவீடாக சென்று சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் துடைப்பம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவரை சூழ்ந்துக் கொண்ட அப்பகுதி மக்கள் மின் கட்டணம், குடிநீர் மற்றும் வடிகால் கட்டணங்களை டெல்லி அரசு உயர்த்திவிட்டது தொடர்பாக கவலை தெரிவித்தனர்.

அவற்றை பொறுமையாக கேட்டுக்கொண்ட கெஜ்ரிவால், எங்கள் கட்சியின் ஆட்சி அமைந்தால் உயர்த்தப்பட்ட கட்டணங்களை அனைத்தும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

காரில் செல்லாமல் ஆட்டோவில் சென்று வாக்காளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவாலை பல பெண்கள் துடைப்பத்தை உயர்த்தி காட்டி வரவேற்றனர்.

அரசியலில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காகவே துடைப்பத்தை என் கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தாலும், துடைப்பத்தை உயர்த்தி காட்டி அவரை பெண்கள் வரவேற்பது தர்மசங்கடமாக உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger