மழை பனிக் காலத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக எல்லையோரம் பதுங்கியுள்ள 700 பாக். தீவிரவாதிகள் 700 Pakistan militants ready to infiltrate Indian border
ஜம்மு, அக்.21-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் எல்லையோரம் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 150 முறைக்கும் மேலாக இதுபோன்ற தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
ஆரம்பத்தில் சிறிய அளவிலான துப்பாக்கி சூட்டில் மட்டுமே ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் தற்போது ராக்கெட் மற்றும் மோர்டார் குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் மூர்க்கமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எல்லைக் கோட்டுப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பாகிஸ்தானின் அசுர தாக்குதலுக்கு பயந்து ஊரை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.
எல்லை பகுதியை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நாளை (22ம் தேதி) நேரில் சென்று பார்வையிட உள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ஆர்.எஸ்.புரா செக்டரில் உள்ள 5 ராணுவ நிலைகளின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
இரவு 9 மணிக்கு நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி தந்ததாகவும் இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்ததாகவும் ஜம்முவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டின் அருகேயுள்ள பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் 40 தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் சுமார் 700 பேர், அடைமழை மற்றும் உறைபனி காலத்தை எதிர்நோக்கி இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக காத்திருப்பதாக நம்பத்தகுந்த உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?