Gautham Menon teams up with Ajith? - அஜித்துடன் இணையும் கௌதம் மேனன்!
அஜித்துடன் இணையும் கௌதம் மேனன்!
ஸ்டைலிஷான இயக்குநர் என்று பெயர்பெற்ற கௌதம் மேனனுக்கு, மறுபடியும் நல்ல நேரம் வந்திருக்கிறது.
அஜித், சூர்யா என்று ஒவ்வொருவராக கௌதம் படத்தில் நடிக்க முதலில் ஆர்வமாக இருந்து, பின் கழன்று கொண்டனர். இப்போது மீண்டும் கௌதம் படத்தில் நடிக்க முன்வருகிறார்களாம்.
சூர்யா தான் வாங்கிய 5 கோடி அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தந்தார். ஆனால், இந்த உறவு பிரியாது. மீண்டும் கௌதமுடன் இணைவேன் என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.
'அடுத்த வருஷம் மீண்டும் ஒரு சிறந்த படத்தோட நான் வந்து உங்களை சந்திப்பேன். அதுக்காக எடுத்த ஒரு இடைவெளியுடன் கூடிய முடிவுதான் அது. ரெண்டு பேருக்குமே ஒருத்தக்கொருத்தர் மரியாதை இருக்கு ' என்று ஒரு இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசினார்.
கௌதம் மேனனை மனதில் வைத்துதான் சூர்யா இதைப் பேசினார் என்பது விஷயம் அறிந்தவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.
இப்போது அஜித் கௌதம் படத்தில் நடிக்க இருக்கிறார். 'வீரம்' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன்தான் இயக்கப் போகிறார்.
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?