கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை பெண்ணிடம் டிக்கெட் பரிசோதகர் செக்ஸ் தொல்லை kanyakumari express train Ticket Examiner torture chennai woman
திருச்சி, அக். 20–
திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் 22 வயது மகள் நேற்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் தட்கல் டிக்கெட்டில் திருச்சிக்கு பயணம் செய்தார்.
இந்த ரெயில் விழுப்புரத்தை தாண்டி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அந்த இளம்பெண் இருந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் டிக்கெட்களையும், அடையாள அட்டைகளையும் வாங்கி பார்த்து ஆய்வு செய்தார்.
அப்போது அந்த இளம் பெண்ணிடம் முறையான அடையாள அட்டை ஏதும் இல்லை என்பதால் ரூ.480 அபராதமாக வசூலிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த டிக்கெட் பரிசோதகர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம் போடவே குடிபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணுக்கு பொறுக்க முடியாத அளவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதை அருகில் இருந்த சக பயணிகள் தட்டி கேட்டும் அந்த டிக்கெட் பரிசோதகர் கண்டு கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் கதறியபடி தனது தாயாருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் உறவினர் 2 பேரை அழைத்துக்கொண்டு திருச்சி ரெயில் நிலையத்துக்கு வந்தார்.
இதற்கிடையே அந்த அந்த ரெயிலும் திருச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தது. டிக்கெட் பரிசோதகரின் தொந்தரவால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கதறியபடி ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் தனியாக ரெயிலில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர் என்று ஆவேசமாக கூறி அந்த டிக்கெட் பரிசோதகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையில் உள்ள அவரை அரசு மருத்துமனையில் பரிசோதனை செய்து போதையில் இருப்பதற்கான சான்றிதழை வாங்க வேண்டும். இல்லையென்றால் ரெயிலை இங்கிருந்து நகர விடமாட்டோம் என்று ஆவேசமாக கூறினார்.
இதற்கிடையே ரெயில் மெதுவாக நகர்ந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரெயில்வே போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் அந்த பெண் டாக்டர் எந்த சமரசத்துக்கும் நான் உடன்படமாட்டேன். டிக்கெட் பரிசோதகரை கீழே இறக்கி பரிசோதனை செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தால் மட்டுமே ரெயிலை இங்கிருந்து நகர விடுவேன் என்று கூறினார்.
திடீர் திருப்பமாக அங்கு வேடிக்கை பார்த்த பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கினர். இதை தொடர்ந்து அந்த டிக்கெட் பரிசோதகரை கீழே இறக்கி ரெயில்வே போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் சுமார் 40 நிமிடம் தாமதமாக 12.10 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.
பின்னர் அங்கு வைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அந்த இளம்பெண்ணின் தாயாரான டாக்டரும் புகார் எழுதி கொடுத்தார். இந்த நிலையில் அந்த டிக்கெட் பரிசோதகருக்கு ஆதரவாக 50–க்கும் மேற்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த டிக்கெட் பரிசோதகர் விடுவிக்கப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணும் அங்கிருந்து உறவினர்களுடன் புறப்பட்டார். சுமார் 3 மணி நேரம் திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்த பரபரப்பு அதன் பின்னர் அடங்கியது.
இந்த நிலையில் இன்று மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள், நேற்று பிரச்சினையில் சிக்கிய அந்த டிக்கெட் பரிசோதகரை போலீசார் தரக்குறைவாக நடத்தியதாக கூறி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரெயில், மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றில் டிக்கெட் பரிசோதகர்கள் பணிக்கு செல்ல வில்லை. அவர்கள் இல்லாமலேயே ரெயில் புறப்பட்டு சென்றது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?