Sunday 20 October 2013

தேதி அறிவித்த பின் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு: சீமான் பேட்டி After announced coalition parliamentary election date seeman Interview

தேதி அறிவித்த பின் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு: சீமான் பேட்டி After announced coalition parliamentary election date seeman Interview

மயிலாடுதுறை, அக்.21–

மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் நாகை வடக்கு மாவட்டம் சார்பில் கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதில் கலந்துகொள்ள வருகை தந்த கட்சியின் தலைவர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பதை கண்டித்து வருகிற 23ந் தேதி(புதன்கிழமை) குடவாசலில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் திரளான விவசாயிகள், கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

இலங்கை போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடுத்த மாதம் 8, 9ந் தேதிகளில் பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் தமிழ் தேசிய இயக்க அமைப்பாளர் பழ.நெடுமாறன், நடராசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். நரேந்திரமோடி பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனியார் மயம், பொருளாதார கொள்கை மட்டுமே பேசுகிறார்.

ஆனால் நாட்டின் பாதுகாப்பு குறித்து இதுவரை பேசவில்லை. கச்சத்தீவில் சீனா முகாமிட்டுள்ளது. இதனால் நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் கலியபெருமாள், சாகுல்அமீது, நடராசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger