நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமலஹாசன் தானே இயக்கி கதாநாயகனாய் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக � ��ூஜா குமார் நடிக்கிறார். சிறப்பு வேடத்தில் சேகர் கபூர் நடிக்கிறார். கமல்ஹாசன் இயக்கி நடிப்பதால் ரசிகர்களிடையே படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
இந்� �� நிலையில் கமல் மே 1 இந்தப் படத்தின் முதல் போஸ்டர் ஸ்டில்லை வெளியிட்டார்.
விஸ்வரூபம் என்ற தலைப்பு, உருது மொழி எழுத்துருவைப் போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. பின்னணியில் அமெரிக்கா.
இந்தப் படம் ஆப்கன் தீவிரவாதம் தொடர்பானது என்று கூறப்பட்டுவந்த நிலையில், அதன் எழ ுத்துரு உருது போல அமைந்திருப்பது பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ 30 செகன்ட் ட்ரைலரிலும் இந்த ஒரு படம்தான் இடம்பெற்றுள்ளது. ஒரு வெள்ளைப்புறா பறந்து செல்கிறது.
அடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம்... அதன் மத்தியில் கமல் நிற்கிறார்.. 'முழு நிறைவு பெறும் தருவாயில். .. எழுத்தும் ஆக்கமும் கமல் ஹாஸன்' என்று முடிகிறது.
இந்த ட்ரைலரை கமல் உருவாக்கியுள்ள ஸ்டைல் அந்தப் படத்தின் தரத்தைக் காட்டுவதாக உள்ளது. எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறது.
படத்தை கமல் ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும், பிவிபி சினிமாவும் இணைந்து தயாரிக்கின்றன. சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். சனுஜான் � �ர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தை இந்தி தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட இருப்பதால் நடிகர் நடிகைகளை கமல் இரு மொழிகளிலும் தயாராகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். படத்தில் கமல் ஆப்கான் தீவிரவாதியாக நடிக்கிறார். கமல் ஒருமுறை மேடையில் பேசும் போது "உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் தலைதூக்கும்" என்று உணர்ச்சிபட கூற ினார். கமலின் இந்த தேர்வு வெற்றியைத் தரும் என்று அவரது ரசிகர்கள் பேசிக்கோள்கிறார்கள்.
கமல் சார்... அடுத்த டீஸர் எப்போ.. ஆர்வம் தாங்கல தான் ...
வழக்கம்போல வதந்திகளின் புதுக்கதைகளுடன் வளம் வந்துகொண்டு இருக்கும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் நாட்கள் நகர � �திகமாய் இருப்பது இந்த படத்துக்கு பலமா இல்லை இதுவே பலகினமா எனபது படம் வந்த பின்தான் தெரியும்...
http://kallaool.blogspot.in<>
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?