Monday 14 October 2013

வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி மீன்கள் பறிமுதல்: சிங்கள மீனவர்கள் மீண்டும் அட்டூழியம் fishermen attack fish seized near Vedaranyam

வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி மீன்கள் பறிமுதல்: சிங்கள மீனவர்கள் மீண்டும் அட்டூழியம் fishermen attack fish seized near Vedaranyam

வேதாரண்யம், அக். 14–

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக வேதாரண்யம், நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

மேலும் தமிழக மீனவர்களை சிறை பிடித்து செல்லும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. தற்போது சிங்கள மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

கடந்த 11–ந்தேதி இரவு வேதாரண்யத்தை சேர்ந்த மீனவரை அரிவாளால் வெட்டி மீன்கள், வலைகளை பறித்து சென்றனர்.

இந்த சம்பவம் அடங்குவதற்குள் மேலும் ஒரு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:–

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த செம்பியன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே ஊரை சேர்ந்த கண்ணையன், தங்கத்துரை, தணிகாசலம், சுப்பிரமணியன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதே போல் காந்திமதி என்பவருக்கு சொந்தமான படகில் அவரது கணவர் ரத்தினவேல், பாலகிருஷ்ணன், செம்பியன் ஆகியோரும், விஜயேந்திரனுக்கு சொந்தமான படகில் 4 பேரும், மற்றொரு படகில் 4 பேரும் மீன்பிடித்து கொண்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

கோடியக்கரைக்கு தென் கிழக்கே வந்து கொண்டிருந்த போது இலங்கையை சேர்ந்த மீனவர்கள் தமிழக மீனவர்களை வழிமறித்தனர். பின்னர் தமிழக மீனவர்களை கட்டையால் தாக்கினார்கள்.

அவர்கள் வைத்திருந்த மீன்கள் மற்றும் படகில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் தமிழக மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டது.

வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை, சிங்கள மீனவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துவது மீனவ கிராமங்களில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger