ஆரம்பம் படத்துக்கு திடீர் சிக்கல்: தீபாவளிக்கு ரிலீசாகுமா?
by abtamil
Tamil newsYesterday,
தீபாவளி சரவெடியில் வெடிப்பதற்கு தயாராக இருந்த அஜித்தின் ஆரம்பம் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள படம் ஆரம்பம்.
ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கும் இப்படத்தினை விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கிறார்.
வருகிற 31ம் திகதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆரம்பம் படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை செனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் படத்துக்கு எதிரான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி 'கேடி' என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எனது மகனிடமிருந்து ரூ. 1.50 கோடி கடன் வாங்கினார்.
இந்தப் பணத்தை 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி பணத்தை திருப்பித் தரவில்லை.
இந்நிலையில் அவர் ஆரம்பம் படத்தை தயாரித்து வெளியிடுவதாக அறிந்தோம்.
என் மகனிடம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 4 கோடியே 60 லட்சம் தந்த பிறகே படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு ஏ.எம்.ரத்தினத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஏ.எம்.ரத்னம், இந்த படத்தின் தயாரிப்பாளர் நான் இல்லை என்றும் ஏ.ரகுராம் என்பவர்தான் சத்ய சாய் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கிறார் என பதிலளித்துள்ளார்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?