பக்ரீத் திருநாள்: ஜெயலலிதா வாழ்த்து Jayalalitha wishes to bakrid festival
சென்னை, அக். 15-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உருவங்களையோ, செல்வங்களையோ காணாமல் உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே இறைவன் காண்கிறான்; எனவே உள்ளத் தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளைப் பெற முடியும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு, சாதி,
மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம். தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும்,
ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?