கூடுவாஞ்சேரி யில் குடிசைகள் எரிந்து வீடுகள் நாசம்
நந்திவரம் – கூடுவாஞ்சேரி பேரூராட்சி சார்பில் திரவுபதி அம்மன் கோவில் தெரு அருகே மேல் நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் அங்கேயே குடிசை போட்டு தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை அருகில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் திடீரென தீப்பற்றியது. காற்றில் வேகத்தில் தீ அருகில் இருந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கும் பரவியது. மொத்தம் 10 வீடுகளில் தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமானது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
தகவல் அறிந்ததும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அனைத்து வீடுகளும் எரிந்து சாம்பலாயின. பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமானது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும். தீப்பிடித்த போது பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியே சென்றிருந்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து டுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?