Thursday 17 October 2013

நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் இன்று 2–வது நாளாக ஆய்வு Today in Tirunelveli District mineral sand quarrying 2nd day of study

நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் இன்று 2–வது நாளாக ஆய்வு Today in Tirunelveli District mineral sand quarrying 2nd day of study

Tamil NewsToday,

நெல்லை, அக். 18–

நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் சிறப்பு குழுவினர் இன்று 2–வது நாளாக ஆய்வு நடத்தினர்.

தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர் நேற்று நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் ஆய்வு பணியை தொடங்கினர்.

128 அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சென்று ஒரே சமயத்தில் சோதனை நடத்தினர். நேற்று கடலோர பகுதிகளான உவரி, குட்டம், கரைசுத்து உவரி, கரைசுத்து புதூர், செட்டிகுளம், கோடாவிளை, காரியாகுளம், லெவிஞ்சிபுரம், இருக்கன்துறை, கூடங்குளம், விஜயாபதி, திருவம்பலாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 22 தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சமயமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் கோடாவிளை, காரியாகுளம் பகுதி குவாரிகளில் ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு குவாரியிலும் சர்வேயர் மூலம் அளந்து குறிப்பிட்ட அளவுக்குத்தான் மணல் எடுக்கப்பட்டுள்ளதா, அனுமதியளிக்கப்பட்ட இடத்தில்தான் அள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் நில அளவைத் துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை, சுற்றுச்சூழல், நீர்வளத்துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 52 குவாரிகள் உள்ளன. நேற்று 22 குவாரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள குவாரிகளில் இன்றும், நாளையும் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

இந்த ஆய்வு பணிக்காக 70 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் அடங்கிய துப்பாக்கியுடன் கூடிய 7 போலீசார் பாதுகாப்புக்கு செல்கின்றனர். மேலும் குவாரிகள் தோறும் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தாது மணல் முறைகேடு தொடர்பாக மீனவ கிராமங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும் என்று கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன் சிறப்பு குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே தாதுமணல் குவாரிகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் 500–க்கும் மேற்பட்டோர், தாதுமணல் ஆலைகளை திறக்க அனுமதி வழங்க கோரி நேற்று ககன்தீப்சிங் பேடியை சந்தித்து மனு கொடுத்தனர்.

...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger