சமூக சேவகி சரோஜினி வரதப்பன் மரணம் social worker sarojini varadappan death
Tamil NewsToday,
சென்னை, அக். 17–
சமூக சேவகி சரோஜினி வரதப்பன் சென்னையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் உள்ள பக்தவச்சலம் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்த சரோஜினி வரதப்பனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை 7.50 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
சரோஜினி வரதப்பன் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனின் பெரியம்மா ஆவார். டெல்லியில் இருந்த ஜெயந்தி நடராஜனுக்கு சரோஜினி வரதப்பன் மறைவு செய்தி தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் விமானம் மூலம் சென்னை விரைந்தார்.
சமூக சேவகி சரோஜினி வரதப்பன் 1921–ம் ஆண்டு செப்டம்பர் 21–ந்தேதி சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பக்தவச்சலம் தமிழக முதல்–அமைச்சராக 1963–ம் ஆண்டு முதல் 1967–ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
சரோஜினி வரதப்பன் இளமையிலேயே தனது உறவினரான வரதப்பனை திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பின்பும் படிப்பை தொடர்ந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி மூலம் பொலிடிகல் சயின்ஸ்–ல் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் வைஷ்ணவிசம் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.
சிறு வயது முதலே சமூக சேவையில் நாட்டம் கொண்டவர். ஏராளமான சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தனது தாயார் ஞானசவுந்தராம்பாளுடன் இணைந்து ''பெண்கள் இந்தியா கூட்டமைப்பு'' மூலம் பல்வேறு சமூக சேவையாற்றி வந்தார்.
அதன்பிறகு பெண்கள் இந்தியா கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பேற்றார். தொடக்கத்தில் 4 கிளைகள் மட்டுமே இருந்த கூட்டமைப்புக்கு நாடு முழுவதும் 76 கிளைகள் தொடங்கப்பட்டது. தனது 80–வது வயதில் சமூக சேவை மற்றும் சுவாமி நாராயண் இயக்கத்திற்காக பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றார்.
இசை மீது ஆர்வம் கொண்டவர். பாரூர் சுந்தரம் ஐயரிடம் முறைப்படி இசை பயின்றார். காங்கிரஸ் மாநாடுகளில் இறை வணக்கப் பாடல்கள் பாடியுள்ளார். இந்தி மொழியிலும் புலமை பெற்றவர்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?