நடிகர் விஜய் விவாகரத்து : மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்டு அடம்
by abtamil
Tamil newsToday,
"என் மனைவிக்கு போதுமான அளவு பணம், சொத்துகளை கொடுத்துள்ளேன். இனிமேல் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வாடகை வீட்டில் நான் குடியிருப்பதால், அவர் தான், எனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என, நடிகர் துனியா விஜய் தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் விஜய், தன் மனைவி, நாகரத்னாவிடமிருந்து விவாகரத்து கோரி, பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதற்கு, கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என, நாகரத்னா பதில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜீவனாம்சம் தர மறுத்துள்ள விஜய், குடும்பநல நீதிமன்றத்தில், ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் என் மனைவிக்கு, ஏற்கனவே, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கொடுத்துள்ளேன். செங்கல் தொழிற்சாலை, ஜவுளி தொழிற்சாலை வாங்கி கொடுத்தேன்.
சமீபத்தில் திரைக்கு வந்த, ஜெயம்மன மகா திரைப்படம், என் மனைவி நாகரத்னா தயாரிப்பு என்பதால், அதன் மொத்த இலாபமும், அவரையே சேரும்.
நான், 13 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனவே, எனக்கு தான், நாகரத்னா ஜீவனாம்சம் தர வேண்டும். அவருக்கு, நான் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என, குறிப்பிட்டுள்ளார்
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?