ஜிம்முக்கு போகணும்! கிளாமரா நடிக்கனும்! – லக்ஷ்மி மேனன்!
by admin
TamilSpyToday,
நடிகை லக்ஷ்மி மேனன் தற்போதைய தமிழ்த்திரையுலக ரசிகர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவர். இளைய தலைமுறையினரின் ஆதரவு பெற்றுவிட்ட லக்ஷ்மி மேனனுக்கு பட வாய்ப்புகளில் குறை ஏற்படவா போகிறது.
விமலுடன் மஞ்சா பை, கௌதம் கார்த்தியுடன் சிப்பாய், விஷாலுடன் பாண்டிய நாடு, சித்தார்த்துடன் ஜிகர்தண்டா என யூத்ஃபுல்லான பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார் லக்ஷ்மி மேனன். இத்தனை படங்களை லையில் வைத்திருக்கும் லக்ஷ்மி மேனனைப் பார்த்து திரையுலகமே வியக்கும் ஒரே விஷயம, இதுவரை லக்ஷ்மி மேனன் கிளாமராக ஒரு சீனில் கூட நடிக்காதது தான்.
கிளாமராக நடிப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் "கிளாமராக நடிக்க நல்ல உடலமைப்பு தேவை. ஆனால் எனக்கு அந்த உடலமைப்பு இல்லை. நான் ஜிம்முக்கு சென்று என் உடலமைப்பை மாற்ற வேண்டும். அதன்பிறகு கிளாமராக நடிப்பது பற்றி யோசிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?