பாராளுமன்ற தேர்தலில் 9 ஆண்டு கால சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்: ஞானதேசிகன் பேட்டி I will vote in parliamentary elections the 9 year record gnanadesikan interview
Tamil NewsToday,
கோவை, செப். 30–
தமிழக காங்கிரஸ் சார்பில் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் கோவையை அடுத்த சாடிவயலில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தொடங்கி வைத்தார். முன்னாள் மத்திய மந்திரி பிரபு முன்னிலை வகித்தார். புறநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து 150 பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமை தொடங்கி வைத்த ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருச்சியில் நரேந்திர மோடி பங்கேற்ற பாரதீய ஜனதா கூட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மைதானத்தில் 35 ஆயிரம் பேர்தான் பங்கேற்க முடியும். லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்று திரித்து கூறுகிறார்கள்.
காங்கிரசில் வாரிசு அரசியல் உள்ளது என்று கூறுகிறார்கள். அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் உள்ளது. அதனை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புகிறோம். பாரதீய ஜனதா கட்சியினர் மோடியை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்போம். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பான விஷயத்தில் ராகுல் காந்தி கருத்தை வரவேற்கிறோம்.
பிரதமர் மன்மோகன்சிங் கிராமத்து பெண் போல பேசுகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் பிரதமர் அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை.
கோவை மாநகர் மாவட்டத்தில் டிவிசன் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில தலைவர் அனுமதி இல்லாமல் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த நியமனம் செல்லாது. பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டை வைத்து கூட்டணி அமையும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?