சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய விவகாரங்களுக்கான அமைச்சகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வெளிவந்த, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சபை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், 407 பக்கங்களைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நா.த.அரசாங்கம் விரிவாக ஆய்வு வருவதாக தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் மனித உரிமை சாசனங்களுக்கு முரணான பல்வேறு விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இருப்பது தெட்டத் தெளிவாக உள்ளதென குறிப்பிட்டுள்ள நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவாகாரங்களுக்கான அமைச்சகம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான நா.த.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை ஜனவரி மாத தொடக்கத்தில் சர்வதேசத்திற்கு தெரிவிக்கப்படுமென செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமையாளர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்களினால் நியமிக்கப்படும் இத்தகைய ஆணையங்கள் சிங்கள பேரினவாத நிலைப்பாட்டடை நியாயப்படுத்துவதோடு, தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை மூடிமறைக்க முனைகின்றது.
சர்வதேசத்தை ஏமாற்றும் இத்தகைய சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான மூலோபாய, தந்திரோபாய செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருவதோடு, ஒருங்குபட்ட செயற்பாடுகளை மையப்படுத்தி 'நீதிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம்' என நா.த.அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
http://tamil-cininews.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?