Wednesday, 30 October 2013

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின்–வைகோ மரியாதை Pasumpon muthuramalinga devar statue vaiko respect

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், வாரியத் தலைவர்கள் முனியசாமி, தங்கமுத்து, முருகையா பாண்டியன் ஆகியோர் தேவர் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனி முத்து உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத்தலைவர் ஞானதேசிகன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி அஞ்சலி செலுத்தினார்.
பல்வேறு தேவரின அமைப்புகளின் சார்பில் ஜோதி ஏந்தி வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger