பதிவர் மதுரை சொக்கன் நேற்று மாலை பதிவர் சென்னை பித்தனைச் சந்தித்தார். அப்போது அவர்கள் பேசிக்கொண்டவை……….
செ.பி-வாங்க சொக்கன்.நல்லாருக்கீங்களா?
சொக்கன் -திருச்சிற்றம்பலம்.நலமே.நட்சத்திர வாரத்தைச் சிறப்பாக முடித்து விட்டீர்கள். வாழ்த்துகள்.
செ.பி-எல்லாம் உங்கள் வாழ்த்துகளின் பலம்தான்.
சொக்கன் – நான் ஏழு நாட்களின் பதிவுகளையும் படித்தேன்.ஆறு நாட்கள் சிறப்பாக இருந்தன. கடைசி நாள் அப்படி ஒரு பதிவு தேவையா?சர்தார்ஜி ஜோக்கைச் சொல்கிறேன்.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்!
செ.பி.-இதெல்லாம் சும்ம ஜாலிதான் சொக்கன்.
சொக்கன் – என்ன ஜாலி?எதை வேண்டுமானாலும் எழுதுவதா?படிப்பவர்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டாமா?
செ.பி-.சொக்கன்!நான் ஒரு போதகன் அல்ல.ஒரு பல்சுவைப் பதிவன்.நீங்கள் சொல்கிறீர்கள் நல்ல கருத்துகள் மட்டுமே சொல்ல வேண்டும் என்று.பாருங்கள்-அன்பே சிவம் என்ற பதிவுக்குக் கிடைத்த தமிழ்மண வாக்குகள்-14;அன்னையைப் போலொரு பதிவுக்கு 15 ;ஆனால் இந்த புரியாத புதிர் என்ற சர்தார்ஜி ஜோக் பதிவுக்கு 17 வாக்குகள்.வாசகர்களின் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தானே இது காட்டுகிறது?அவர்கள் விருப்பத்தை நான் பூர்த்தி செய்கிறேன். அவ்வளவுதான்!
சொக்கன் –சினிமாக்காரர்கள் மாதிரிப் பேசுகிறீர்கள் பித்தன்.ரசிகர்கள் விரும்புகிறார்கள், நாங்கள் கொடுக்கிறோம் என்று அவர்கள்தான் சொல்வார்கள்.இப்படிச் சொல்கிறீர்களே,இந்த வாரத்திலேயே வந்த "எழுத்தறிவித்தவன் -சிறுகதை"க்கு 22 வாக்குகள் கிடைத்தனவே.அதை சௌகரியமாக ஒதுக்கி விட்டீர்கள்.நான் சொல்வது இதுதான் .இந்த மாதிரிப் பதிவெல்லாம்,பிரபா,சிவகுமார்,கோகுல் போன்ற இளைஞர்கள் எழுதலாம்.நீங்கள் எழுதலாமா?
செ.பி-ஐயா,நீங்கள் சொல்வது போல் நான் எழுத ஆரம்பித்தால் உங்களை மாதிரி ஈ ஓட்ட வேண்டியதுதான்.
சொக்கன் –ஈ ஓட்டினாலும் பரவாயில்லை.நான் நல்லதையே சொல்வேன்.அது தவிர மொய் வைத்து மொய் எடுக்கும் வழக்கம் எனக்கு வேண்டாம்.நான் சொல்லும் கருத்துக்களை விரும்புவோர் மட்டும் வரட்டும்;படிக்கட்டும்.உங்களுக்கு ஏற்கனவே சுமாரான எண்ணிக்கையில் தொடர்பவர்கள் இருக்காங்க!நல்லதே எழுதலாம்.
செ.பி- இதெல்லாம் ஒரு போதை மாதிரி சொக்கன்!பழக்கமாயிட்டா விட முடியாது.நீங்க ஏதோ திருமூலர்,ஆன்மீகம் என்று காலத்தை ஓட்டறீங்க. எல்லோராலும் அது முடியுமா?உங்க பாணியில் நீங்க போங்க;என் பாணியில் நான் போகிறேன்.நீங்க கிழக்கு;நான் மேற்கு.
"East is east and west is west and never the twain shall meet" .இதை இத்தோடு நிறுத்தி விட்டுக் காஃபி சாப்பிடுவோம் வாங்க!"
இருவரும் காஃபி சாப்பிட ஆரம்பித்தனர்.
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-vaanam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?