மங்காத்தா மங்காத்தான்னு ஊரெல்லாம் ஒரே பேச்சு. பெங்களூரில் கன்னட நடிகர்களுக்கு ஒட்டும் போஸ்டர்களுக்கு இணையாக, சென்னையிலும் எந்த சுவற்றில் பார்த்தாலும் மங்காத்தா போஸ்டர்கள். சென்னையில் சுற்றி திரியும் மாடுகளுக்கும் கழுதைகளுக்கும் நல்ல தீனிதான்.
'வரலாறு'க்கு அப்புறம் அஜீத் நடித்த படம் எதுவும் பார்க்காமல் இருந்தேன். ஆனால் நேற்று இரவு மாரியாத்தா சாமி என் கனவுல வந்து "மங்காத்தா நாளைக்கு போய் பார்த்துடு. இல்லை ரத்தம் கக்கி செத்துடுவ" என்று சொல்லிடுச்சு. அதனால உயிருக்கு பயந்து டிக்கெட்டுக்காக தியேட்டர் தியேட்டறாய் ஓடினேன். மாரியாத்தா அருளில் டிக்கெட்டும் கிடைத்து விட்டது.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் என் அருகில் இருந்த ஒரு காலேஜ் பையன், "ஒஒஒஒஒஒ" என்று அலற ஆரம்பித்தான். அவன் காதிற்குள் ஏதாவது குளவி புகுந்திருக்குமோ? அடிக்கடி கத்தி கத்திக் கொண்டே இருந்தான். ஆனால் படம் முடியும் வரை அந்த குளவி அவன் காதிலிருந்து வெளியேறவில்லை என்று நினைக்கிறேன்.
கிரிக்கெட் சூதாட்டத்தை வைத்து கதை அமைத்திருக்கிறார்கள். "காக்க காக்க" சூர்யா டீம் மாதிரி, ஒரு நாலு பேர் சேர்ந்த கும்பல், சூதாட்ட பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்க, அந்த டீமில் அஜீத் சேர்ந்து, எல்லோரும் அதை எப்படி கொள்ளையடிக்கிறாங்க அப்படிங்கறது தான் கதை. "The Italian Job" படத்தை கொஞ்சம் உல்டா பண்ணி, படமென்று எதோ எடுத்திருக்கிறார்கள்.
பணத்தை கொள்ளைடிக்கும் காட்சி டாப் ;-)
படத்தில் அஜீத்தின் நடிப்பு மிக இயல்பு. அதுவும் அவர் சட்டை கழட்டி நிற்கும் காட்சி அபாரம். என்ன ஒரு கட்டுமஸ்தான உடம்பு! வயிற்றில் முடி நிறைய காணப்பட்டதால், அஜீத்துக்கு எத்தனை பேக் என்று எண்ண முடியவில்லை.
அஜீத் அங்கிளுக்கு த்ரிஷா ஆண்டி, சரியான ஜோடி. லட்சுமிராயின் கேரக்டர் என்னவென்று படத்தோட கடைசில அஜீத்தே சொல்லுவாரு. ஆனால் அது mute செய்யப் படும்.
படத்திற்கு "Strictly No Rules" ன்னு கேப்சன் வச்சதுக்கு பதிலாக, "Strictly No Dance" ன்னு வச்சிருக்கலாம்.
விஜய் படத்துல கதை எப்பவுமே ஒரே மாதிரி இருக்கும். அஜீத் டான்ஸ்ல ஒரே ஸ்டேப் தான். 'வெத்தலைய போட்டேண்டி' க்கும் போட்ட ஸ்டேப் தான் 'விளையாடு மங்காத்தா' பாட்டுக்கும்.
Premji is the Joker in Mangatha.
அஜீத் ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்து பார்த்தால் படம் நூறு நாட்கள் தாண்டி ஓடும்.
நமீதா டச்: மங்காத்தா - The Indian Job.
டிஸ்கி 1: பில்லா 2 வில் அஜீத்துடன் நடித்ததை தவிர, இந்த பட விமர்சனத்திற்கும், நமிதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹிட்ஸ்க்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது.
நமீதா டா!
டிஸ்கி 2 : இந்த விமர்சனத்தை படித்து விட்டு அடிக்கனும்ன்னு தோணுச்சுனா அட்ரஸ் கொடுங்க. எங்க ரூம்ல ஒரு அஜீத் ரசிகன் இருக்கான். படம் ரிலீஸ் ஆனா நாளில் இருந்து அவன் அலம்பல் தாங்க முடியல. நான் அவனை அடிச்சு, ஒரு ஆட்டோவில் நீங்க சொல்ற அட்ரஸ்க்கு அனுப்பி வைக்கிறேன். நீங்களும் உங்க வெறி தீர அடிச்சிட்டு, திருப்பி அனுப்பிச்சுடுங்க.
http://blackinspire.blogspot.com
http://blackinspire.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?