ஒருவர் சொந்த விஷயமாக வெளியூர் சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்தார். அறைக்குள் நுழைந்தவுடன் ஒரு கணினி இருப்பதைப் பார்த்தார். இண்டெர்னெட் தொடர்பும் இருந்தது.
உடனே தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பத் தீர்மானித்தார். அனுப்பும் போது மின்னஞ்சல் முகவரியைத் தவறாக அடித்து விட்டார்!
ஏதோ ஒரு ஊரில் தன் கணவனை முதல் நாள்தான் பறி கொடுத்த ஒரு மனைவி, அனுதாபம் தெரிவிக்கும் மின்னஞ்சல்கள் வந்துள்ளனவா என்று பார்ப்பதற்காகத் தன் அஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தாள். மின்னஞ்சலில் வந்த தகவலைப் பார்த்தாள்;மயங்கிக் கீழே விழுந்தாள்.
அவள் மகன் பதறிப்போய் ஓடோடி வந்தான்.அம்மாவைத்தூக்கும்போதே கணினியைப் பார்த்தான்.அதில் இருந்த செய்தி----
"என் அன்பு மனைவிக்கு
என்னிடமிருந்து இவ்வளவு விரைவில் மின்னஞ்சல் வருவது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
வந்து சேர்ந்தவுடனேயே கணினி கிடைத்தது!
உடனே உனக்குத் தகவல் அனுப்புகிறேன். இங்கு எல்லாம் வசதியாக இருக்கிறது.
உன் வருகைக்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
நாளை உன் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உன் அன்புக் கணவன்."
மயங்கி விழாமல் என்ன செய்வாள்!
.........................................................
இரண்டு ஜோக்ஸ்
ராமு:-எனக்குச் சமைப்பது,கழுவுவது,துவைப்பது இதெல்லாம் செய்து அலுத்து விட்டது;எனவேதான் கல்யாணம் செய்து கொண்டேன்.
சோமு:-அடடே! அதே காரணத்துக்காகத்தான் நான் மணவிலக்கு வாங்கினேன்!
……………….
ராமு:-நான் தினமும் அலுவலகத்துக்குச் செல்லுமுன் என் மனைவியை முத்தமிடுவேன்.நீ எப்படி?
சோமு:-நானும்தான்,நீ சென்றபின்.
--------------------------
தர்மம்--ஒரு கவுஜ
அன்றொரு நாள்.....
ஒரு மாலை வேளை........
ரயில்வே ஸ்டேஷன் அது!
நான் டிரெயினின் உள்ளே,
நீ வெளியே.
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில் சந்தித்தபோது
உன் முகத்தில் தான்
எத்தனை உற்சாகம்?
அப்போது தான்
அப்போது தான்
அந்த வார்த்தையை நீ சொன்னாய்
"அய்யா...... தர்மம் போடுங்க சாமி! "
................
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-vaanam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?