தனது கட்சி கலைக்கப்படுவதாக தலைவர் செ.பி. அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.அவரது கட்சி பற்றிய தகவல்கள் முன்பே இங்கு வெளியிடப்பட்டன. பாருங்கள்!
அறிக்கையின் விவரம்-
//இந்த ஆண்டு சனவரி மாதம் மிகுந்த எதிர்பார்ப்புடன் எனது "அனைத்திந்திய அண்ணா,பெரியார்,காமராஜ் ,ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம்" தொடங்கப்பட்டது.கட்சியின் அடிப்படைக் கொள்கையாக நேருவின் சோசலிஸம், காமராஜின் ஜனநாயக சோசலிஸம் ,ராஜாஜியின் தாராள மயமாக்கல்,பெரியார்,அண்ணாவின் சுயமரியாதைக் கொள்கைகள் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதக் கலவையான "அநேகாபெராயிசம்" உருவாக்கப் பட்டது.மிக நல்ல திட்டங்களை மக்கள் முன்,குறிப்பாகப் பதிவர்கள் முன் வைத்தேன்.எதிர்கால இந்தியாவின் சுபிட்சத்துக்கான தாரக மந்திரம் அநேகாபெராயிசம் என்பதில் எனக்கு இப்போதும் ஐயமில்லை.
பதிவர் வாரியம் ஒன்று அமைத்துப் பதிவர்களுக்கு வீடு கட்டித்தருதல், இலவசக் கணினி வழங்குதல் போன்ற பல நல்ல திட்டங்களை பதிவர்கள் முன் வைத்தேன்.
பின் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கிடலாம் எனத்தீர்மானித்து அது பற்றிக் கட்சியின் ஆதரவாளரான நாஞ்சில் மனோ அவர்களுடன் கலந்தாலோசித்தேன்.
ஆனால் இன்று நாடு இருக்கும் நிலையைப் பார்த்தால் என் கட்சி இந்த ஊழல் சூழலில் நிலைத்து நிற்க இயலாது எனத் தோன்றி விட்டது!விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறி விட்டது .எந்தக்கட்சியும் அது பற்றி உண்மையான கவலை கொள்ளாமல் முதலைக் கண்ணீர் வடிக்கும் அவல நிலையைப் பார்க்கிறேன்.மக்கள் படும் இன்னல் என்னால் காணச் சகிக்கவில்லை.இயலாமையில் மனம் புழுங்குகிறேன்.
எனவே சில நாட்கள் இந்தத்துன்பங்களைக் காணாத தூரத்துக்குப் போய்விடத் தீர்மானித்திருக்கிறேன். ஸ்விட்சர்லாந்து சென்று சில நாட்கள் இருந்து வருவேன்.
அதற்கு முன் கட்சியைக் கலைக்கும் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.
அநேகாபெராயிசம் வாழ்க! //
வெல்க தமிழகம்!
இந்த அறிக்கை வெளியிடும்போது கட்சியின் மற்ற இரண்டே உறுப்பினர்களான அவரது மகளும்,மகனும் உடன் இருந்தனர்!
http://dinasarinews.blogspot.com
http://sex-story-indian.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?