நாமதான் சில நேரம் முக்கியமான, உபகாரமான பதிவுகளை ரசிச்சு படிச்சிட்டு மற்றவங்களும் தெரிஞ்சிகிடட்டுமேன்னு காப்பி பேஸ்ட் பண்ணி இன்னாருக்கு நன்றின்னு போடுறோம்னு பார்த்தா கொய்யால நான் சிவாஜி சந்தானம் சாரை பேட்டி எடுத்த பதிவையும் ஒருத்தன் நன்றி கூட போடாமல் தினமலர் பெயர்ல பிளாக் வச்சு காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கான்...!!!
சரி பேட்டியைத்தான் போட்டுருக்கான்னு பார்த்தால், தமிழ்வாசி பிரகாஷ் சாட்டுல வந்து மக்கா உங்க "பிரபல பதிவர்களின் பாடல் காமெடி கும்மி'யையும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறான்னு லிங்க் குடுத்தாரு, அட கொய்யால...!!!
ஏற்கனவே டினமலர் பத்திரிக்கைக்கும் எனக்கும் வாய்க்கா சண்டை நடந்துட்டு இருக்கு, ஏன்னு கேக்குறீங்களா...? டினமலர் பத்திரிக்கை நடுநிலை இழந்து பலகாலம் ஆயாச்சு, என்னைக்கு நடிகைகள் விஷயத்தில் அண்ணாச்சி கைதாகி உள்ளே போனாரோ, அதோடு அந்த பத்திரிக்கை டமால், மறை கழண்டு போச்சு...!!! [[ஜெயில்ல என்னத்தை திங்க குடுத்தானுகளோ தெரியலை]]
விக்கிக்கு ஆன்லைன்ல போயி டேய் அண்ணா தினமலர் என் பதிவை திருடிட்டான்னு சொன்னேன் மூதேவி கிடந்தது சிரியா சிரிக்கிறான் ராஸ்கல், நீ காப்பி பேஸ்ட் பண்ணினேதானே அதான் உன்னையும் காப்பி பேஸ்ட் பண்ணுரானுகன்னு சிரிக்கிறான் [[இருடி வச்சிருக்கேன் உனக்கு]]
அப்புறம் சொன்னான் மெயில் அனுப்பி கேளுடா தினமலருக்குன்னு சொல்லிட்டு, பதில் வரலைன்னா சாணியை கரைச்சிருவோம் நாளைக்குன்னு சொல்லிட்டு [[சண்டைன்னா என்னா சந்தோஷம்ய்யா இவனுக்கு ஆகிர்ர்ர் த்தூ]] குளிக்க போயிட்டான் குளிச்சி பலகாலம் ஆச்சாம்...!!!
சரி மெயில் அனுப்புவோம்னு கிளம்பும்போது, பிரகாஷ் ஆன்லைன்ல இருப்பதை கண்டு, அவருக்கு சாட் பண்ணி விஷயத்தை சொன்னேன், அவரும் செக் பண்ணிட்டு இது தினமலர் பத்திரிக்கை இல்லை அண்ணே, இது தமிழ் தினமலர் அப்பிடின்னு இருக்குன்னு சொல்லிட்டார், ஆஹா தினமலர் தப்பிடுச்சே....!!!
அடுத்து ஆன்லைன்ல வந்த "நாய் நக்ஸ்"நக்கீரனும் அதை உறுதி செய்தார் ஹி ஹி சண்டை போடணும்னு இருந்த தக்காளி ஆசையில மண்ணு விழுந்துருச்சுன்னு மண்ணுல உருண்டு அழுதேன் ஹி ஹி.....
அந்த லிங்க் கீழே குடுத்துருக்கேன், அதை ஒப்பன் பண்ணுனா ரொம்ப ஸ்லோவா இருக்கு, தகராறும் செய்யுது எனவே சிபி அண்ணனை போல தைரியம் உள்ளவர்கள் [[ஓஹோ]] போய் பாருங்கள்.
ஒப்பன் பண்ணாதீங்க வைரஸ் இருக்கிறதாம்...!!!
ஒப்பன் பண்ணாதீங்க வைரஸ் இருக்கிறதாம்...!!!
டிஸ்கி : ஏண்டா காப்பி பேஸ்ட் போடுறதுதான் போடுறே சிபி அண்ணன் "முன்பு" செய்தது போல ஒரு நன்றியாவது போடப்டாதா ஆக்கங்கெட்டவனே...!!!
பஸ்கி : எலேய் இனியும் இப்பிடி செஞ்சேன்னா, மவனே நம்ம திவானந்தா'வின் அல்லக்கை சண்முகபாண்டியனை அருவாளோடு அங்கே அனுப்பிருவேன் சாக்குரதை...!!!
மனோ'தத்துவம் : தோல்விதான் வெற்றியை நிர்ணயிக்கிறது...!!!
http://galattasms.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?