நமது தமிழ்நாட்டுத் தினசரி சைவ உணவு மூன்று வரிசை முறைகளைக் கொண்டதாக இருக்கிறது.
--முதலில் சாம்பார் சாதம்,அடுத்து ரசம் சாதம்,கடைசியில் மோர் சாதம் என்று.
இவை மனிதனின் மூன்று குணங்களின் குறியீடு.
சாம்பார் என்பது பருப்பு சேர்ந்த குழம்பு.பருப்பு இல்லாமல் செய்தால் அதுவே
காரக்குழம்பு, புளிக்குழம்பு,வற்றல் குழம்பு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
(இங்கு ஒரு செய்தியைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.அந்தக்காலத்தில்
மதுரை கணேஷ் மெஸ்ஸில்,சாம்பாரோடு,வெந்தயக் குழம்பு அல்லது மிளகு
குழம்பு ஏதாவது கொடுப்பார்கள்.ஆகா!!
குழம்பு என்றால்,குழம்பியிருப்பது. குழம்பில் காய் சேர்க்கப் படுகிறது;ஆனால்
ரசத்தில் காய் சேர்க்கப் படுவதில்லை,குழம்பில் சேர்க்கப்படும் காயைத் தான்
என்றும் சொல்வார்கள்.
கி.வா.ஜ.அவர்கள் அழகாகச் சொல்வார்,குழம்பில் 'தான்' இருக்கிறது எனவே
குழம்பியிருக்கிறது.ரச்த்தில் 'தான்' இல்லை ;அதனால் தெளிவாக
இருக்கிறது.
எங்கு "தான்" இருக்கிறதோ அங்கு குழப்பம்தான் இருக்கும்.
குழப்பம் என்பது தமோ குணத்தைக் குறிக்கும். எனவே குழம்பிய சாம்பார்
குழப்பம் நிறைந்த தமோ குணத்தையும்,தெளிவான ரசம் ரஜோ
குணத்தையும், மோர் சத்துவ குணத்தையும் குறிக்கும்.
நமது இந்த உணவு நமக்கு அறிவுறுத்துவது நாம் செல்ல வேண்டிய பாதையை-
குழப்பம் நிறைந்த செயலற்ற நிலையிலிருந்து, தெளிவான செயல்பாட்டுக்குச் சென்று பின் கடைசியில் 'அறிந்துகொள்ளும்" நிலையை அடைவது.
இதெல்லாம் எழுதியதில் பசி வந்து விட்டது!
ஆனால் இப்ப டிஃபன்தான்.
நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் இந்த.சாம்பார்,ரசம்,மோர் எல்லாம்..
சாப்பிட்டு விட்டு "ஐ வாண்ட் சம் மோர் "என்று சொல்லலாம்!
(இப்போதுதான் கவனித்தேன்.இந்த ஆண்டில் ஜனவரி முதல் இன்று வரை இப்பதிவுடன் 200 பதிவுகள் எழுதி விட்டேன்! நன்றி!நன்றி!!நன்றி!!!)
(இப்போதுதான் கவனித்தேன்.இந்த ஆண்டில் ஜனவரி முதல் இன்று வரை இப்பதிவுடன் 200 பதிவுகள் எழுதி விட்டேன்! நன்றி!நன்றி!!நன்றி!!!)
http://dinasarinews.blogspot.com
http://sex-story-indian.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?