Thursday 29 August 2013

தேர்தலுக்காக, உணவு பாதுகாப்பு சட்டம் For the election Congress introduced food safety

தேர்தலுக்காக, உணவு பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது: சீமான் பேச்சு For the election Congress introduced food safety law seeman speech 

 காரைக்கால் நகராட்சி திடலில், நாம் தமிழர் கட்சியின் புதுச்சேரி மாநில மகளிர் பாசறை சார்பில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவுநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

செங்கொடி ஏன் வீரத்தமிழச்சியாக, வீரமங்கையாக போற்றப்படுகிறாள்? 10 பேர்கள் சேர்ந்து ஒருவனை வீழ்த்துவது வீரம் அல்ல. தனது உயிரைக் கொடுத்து இன்னொரு உயிரை காப்பதுதான் வீரமாகும். அப்படித்தான் தனது உயிரைக் கொடுத்து 3 அண்ணன்களின் உயிரை அவள் காத்துள்ளார். அதனால்தான் அவள் வீரத்தமிழச்சியாகவும், வீரமங்கையாகவும் போற்றப்படுகிறாள்.

தமிழர்களை இனவெறியால் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் ஏற்றி அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். அவனுக்கு ஒரு தோட்டா போதாதா? அது தேவையில்லை. எங்களுக்கு வேண்டியது எல்லாம் நாடு ஒன்று மட்டும்தான்.

மரணம் தண்டனையாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. உணவுப்பாதுகாப்பு மசோதா என்ற ஒரு மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் சோற்றுக்கு உத்தரவாதம் கொண்டு வருகிறார்கள்.

இது சோனியாவின் கனவுத் திட்டமாம். 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, 10-வது ஆண்டு இறுதியில் இந்த உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வருவதன் அவசியம் என்ன? ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே? தேர்தல் வர உள்ளதால், இதன் மூலம் ஓட்டை பிரிக்க நினைக்கிறார்கள்.

நமது நாட்டு ரூபாயின் மதிப்பு சர்வதேச அளவில் சரிந்துள்ளது. உலகளவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நிலக்கரி ஊழலில் பிரதமர் சம்பந்தப்பட்டிருக்கிறார். கூட்டி சொல்ல முடியாத அளவிற்கு அவர்கள் ஊழல் செய்து மொத்தத்தையும் கூட்டி அள்ளிச் சென்றுள்ளார்கள்.

இன்று நம்மிடையே வலிமை இல்லை. எல்லோரும் கெஞ்சி பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நமது நிலை நிச்சயம் உயரும். பசி, பட்டினி போக்கப்படும். நம்மிடம் எந்த வலிமையும் இல்லை. ஆனால் வாக்கு உரிமை என்ற ஆயுதம் உள்ளது. அதுதான் அறிவாயுதம். அந்த அறிவாயுதத்தால் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

அந்த புரட்சித் தீயை செங்கொடி, முத்துக்குமார் போன்றவர்கள் ஏற்றி வைத்துள்ளார்கள். என்ன விலை கொடுத்தேனும் நமது இனத்தை காப்பாற்ற வேண்டும். மூன்று பேர்களும் விடுதலை ஆகும் வரை களத்தில் இருப்போம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger