Thursday 29 August 2013

பா.ஜனதா தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு bjp leaders house petrol bomb throw in dindigul

திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (27). இவர் 10–ம் வார்டு பா.ஜனதா கிளை தலைவராக உள்ளார். இவருக்கு சத்தியமீனாட்சி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாவார்.
வேன் டிரைவராக வேலைபார்த்து வரும் பிரவீன்குமார் தினமும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் இருந்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஏற்றி கொண்டு வருவது வழக்கம். பிரவீன்குமார் வேலைக்கு சென்று விட்டு சுமார் 10 மணிக்கு தான் வீடு திரும்புவாராம்.

நேற்று காலை வழக்கம்போல பிரவீன்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். இரவு 11 மணி ஆகியும், கணவர் பிரவீன்குமார் வீடு திரும்பாததால் அவரது வருகைக்காக சத்தியமீனாட்சி தனது மாடி வீட்டு வாசலில் காத்து கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் பிரவீன்குமார் வீட்டு முன்பு உள்ள தெருவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் நீண்ட நேரமாக அங்கும், இங்குமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

இதை கவனித்த சத்தியமீனாட்சி ஒருவித பயத்துடனேயே தனது கணவர் வருகைக்காக வீட்டு வாசற்படியில் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென கீழே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை பிரவீன்குமார் வீட்டின் மீது சரமாரியாக வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
பெட்ரோல் நிரப்பிய பாட்டில்கள் வெடித்து தீப்பிடித்தது. அந்த சமயத்தில் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டிருந்த சத்தியமீனாட்சிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி கதவை பூட்டி கொண்டார்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பிரவீன்குமார் வீட்டின் அருகே சென்ற கேபிள் வயர்கள் தீயில் கருகி நாசமானது. மேலும் அவரது வீட்டின் சுவரில் பல இடங்களில் லேசான கீறல்கள் ஏற்பட்டன. மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதில் பிரவீன்குமார் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் போஸ், தனபாலன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பிரவீன்குமார் வீட்டின் முன்பு குவிந்தனர். அந்த சமயத்தில் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய பிரவீன்குமார் தனது வீட்டின் முன்பு பொதுமக்கள் குவிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அப்போது தனது மனைவியிடம் நடந்த சம்பவத்தை பற்றி கேட்டு அறிந்தார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் அங்கு சிதறி கிடந்த பாட்டில்கள் துண்டுகளை சேகரித்தனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger