விஜய் சார் பஞ்ச் டயலாக் பேசல… பேசல…
இருமினால் கூட யாருக்கும் சங்கடமில்லையே என்று கேட்டுதான் இருமுவார் போலிருக்கிறது. அந்தளவுக்கு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாகிவிட்டார் விஜய்.
தனது ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களை அவர் ஐதராபாத் ஷூட்டிங்கில் வைத்து சந்தித்தார் என்று கிசுகிசு கிளம்பினாலும் கிளம்பியது. அலறி அடித்துக் கொண்டு அந்த செய்திக்கு மறுப்பு அனுப்பி விட்டார். நான் பாட்டுக்கு என் வேலை உண்டு, ஷுட்டிங் உண்டுன்னு போயிட்டு இருக்கேன். எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டாக்காதீங்க என்கிற அளவுக்கு சூடு பறந்தது அந்த அறிக்கையில்.
அப்படியே நம்ம படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் இல்லேங்கிற விஷயத்தையும் வெளியே சொல்லியாகணுமே என்று யோசித்தவர், ஜில்லா படத்தின் டைரக்டர் நேசனை அழைத்து நீங்க கொடுக்கிற பேட்டிகளை கொஞ்சம் விளக்கமே கொடுத்துருங்க என்றாராம். அதாவது இந்த படத்தில் பஞ்ச் டயலாக் இல்லே என்பதை பளிச்சுன்னு சொல்லிடுங்க என்று அர்த்தம்.
மிக சரியாக அதை புரிந்து கொண்ட நேசன், எந்த நிருபரை பார்த்தாலும் இதில் விஜய் சார் ஒரு பஞ்ச் டயலாக்கும் பேசல என்கிறார். இப்படி சொன்னால்தான் என்னவோ இருக்குன்னு அர்த்தம்.
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?