Thursday 24 October 2013

சுவிஸ் வங்கியில் அசன் அலி பதுக்கியுள்ள 800 கோடி டாலர் பணம் மீட்கப்படுமா? India unlikely to get back alleged tax evader Hasan Alis millions

சுவிஸ் வங்கியில் அசன் அலி பதுக்கியுள்ள 800 கோடி டாலர் பணம் மீட்கப்படுமா? India unlikely to get back alleged tax evader Hasan Alis millions

புதுடெல்லி, அக். 24-

ஐதராபாத்தில் பிறந்தவரான தொழிலதிபர் அசன் அலி கான் ரியல் எஸ்டேட், குதிரை வியாபாரம், பழையப்பொருட்கள் விற்பனை என பல்வேறு தொழில்களை செய்து வந்தார். அவர் பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து வருமான வரித்துறையை ஏமாற்றியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இதையடுத்து பணமுறைகேடு செய்ததாக மத்திய அமலாக்கப்பிரிவினர் கடந்த 2011-ம் ஆண்டு அசன் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சுவிஸ் நாட்டின் யூபிஎஸ் வங்கியில் 800 கோடி டாலர் மதிப்பிலான பணத்தை  பதுக்கி ஹவாலா மோசடி செய்துள்ளார் எனவும், இதனால் அவர் 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அசன் அலியின் பணத்தை ரகசியமாக பதுக்கி வைத்திருக்கும் சுவிஸ் வங்கிக்கு எதிரான ஆவண விவரங்களை வழங்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இந்திய அட்டர்னி ஜெனரல் வாகன்வதி கேட்டார்.

கருப்பு பணம் மற்றும் பண முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அசன் அலி வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வர போதுமான ஆதாரம் இல்லாமல் அரசு திணறி வருவதாக கூறப்படுகிறது.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger