என் மருமகன் ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கிறார், என்று நடிகை ஹேமமாலினி பெருமிதத்துடன் கூறியுள்ளார். பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஹேமமாலினி, தர்மேந்திராவின் மகள் இஷா தியோல். இவரும் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார், தமிழில் ஆயுத எழுத்து படத்தில் நடித்திருக்கும் இஷா தியோலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் பரத் தக்தனிக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காதல் திருமணம் குறித்து ஹேமமாலினி அளித்துள்ள பேட்டியில், இஷா தியோல், பரத்தக்தனி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. திருமண தேதி இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. இஷா திருமணம் செய்து குடும்பத்தோடு செட்டில் ஆக வேண்டும் என்று விரும்பியதால் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளோம். திருமண தேதியை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். எனது மருமகன் பார்க்க ரொம்ப அழகாக, ஸ்மார்ட்டாக இருக்கிறார், என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?