Thursday, 13 February 2014

ஒட்டு மொத்த தமிழ் பெண்களுக்காக பா.ம.க. குரல் கொடுக்கிறது: ராமதாஸ் பேச்சு PMK for whole of Tamil women Speaks in Ramadoss speech

ஒட்டு மொத்த தமிழ் பெண்களுக்காக பா.ம.க. குரல் கொடுக்கிறது: ராமதாஸ் பேச்சு PMK for whole of Tamil women Speaks in Ramadoss speech

நெய்வேலி, பிப்.12–

நெய்வேலியை அடுத்த வடக்குத்து கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் எழுச்சி மாநாடு நடந்தது. கடலூர் வடக்கு மாவட்டச்செயலாளரும், வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவருமான ஜெகன் தலைமை தாங்கினார்.

மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில துணை பொது செயலாளர் பழ.தாமரைக் கண்ணன், திருஞானம், மாநில வன்னியர் சங்க தலைவர் குரு எம்.எல்.ஏ. மாநில துணை தலைவர் வைத்தியலிங்கம், மாவட்ட செயலாளர்கள் தர்மலிங்கம், வேங்கை, சேகர், மாநில மகளிர் அணி செயலாளர் சிலம்புச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:–

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் சாலைதோறும் சாராயக்கடைகளை திறந்து மகளிரின் வாழ்க்கையை மண்ணோடு மண்ணாக்கி வருகின்றனர். பா.ம.க. மக்கள் கட்சி வன்னியர் சமூக மக்களுக்காக மட்டும் பாடுபடவில்லை.

ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி. சாராயத்தை அறவே ஒழிக்க வேண்டுமென்றால் அது பெண்களால் மட்டுமே முடியும். உங்கள் வாக்குகளை சரியான நேரத்தில் பயன்படுத்தினால் மட்டுமே முடியும். இதன் மூலம் சமுதாய மாற்றத்தை பெண்களால் மட்டுமே கொண்டு வர முடியும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளுக்காக பணம் வாங்காமல், வன்னியர் இன மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டு வரும் டாக்டர் கோவிந்தசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.

பாராளுமன்றத்தில் நமது உரிமைகளை பெற கடலூர் தொகுதி மக்களாகிய நீங்கள் கோவிந்தசாமியை வெற்றியடைய செய்ய வேண்டும். ஓட்டுகளை விலைக்கு விற்பது பெற்ற குழந்தையை விற்பதற்கு சமம். நல்ல படிப்பு, தரமான விதை–உரம், பூச்சி மருந்து, ஏழைகளுக்கு தரமான மருத்துவம். இதுவே பா.ம.க.வின் அரசியல் கொள்கை. படைப்பாற்றல் கொண்ட பெண்களால் மட்டுமே இது முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சிவகாமி, சுசிலா, நெய்வேலி நகர வன்னியர் சங்க தலைவர் ஜோதிலிங்கம் உள்பட சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். முடிவில் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger