பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. இவர் விருகம்பாக்கம், ஆற்காடு ரோட்டில் உள்ள சியாமளா கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இதேவீட்டில் கல்பாக்கம் புதுப்பட்டனத்aதை சேர்ந்த வினோத்குமார் என்ற வாலிபரும் தங்கி இருந்தார். இவர் சினிமாவில் டான்சராக பணியாற்றினார்.
ஒரு படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அல்போன்சாவும், வினோத்குமாரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். எனவே இருவரும ஒரே வீட்டில் குடியிருந்தனர். நேற்று இரவு சாப்பிட்டு முடித்ததும் வினோத்குமார் படுக்கை அறைக்கு சென்றார். சில நிமிடங்கள் கழித்து அந்த அறைக்குள் அல்போன்சா சென்றபோது வினோத்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
உடனடியாக பக்கத்து வீட்டில் இருந்த டாக்டரை அழைத்தனர். அவர் பரிசோதித்தபோது வினோத்குமார் இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து குடியிருப்பின் காவலாளி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் நள்ளிரவில் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அல்போன்சாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அல்போன்சா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், கணவரை பிரிந்து வாழ்கிறார் என்றும் கூறுப்படுகிறது.
அல்போன்சாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வினோத்குமார் அடிக்கடி வற்புறுத்தி வந்தாராம். ஆனால் திருமணத்துக்கு அல்போன்சா சம்மதிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?