சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரத்தை போலீசாருக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெயிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது
சென்னை பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வாடகை தாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருந்து வருவதாகவும், அவர்களால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் இங்கு தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளும் புகலிடம் தேடி குடியேற வாய்ப்பிருப்பதும் தகவல்களில் தெரியவந்துள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருப்போர் குறித்த விவரம் அல்லது வேறு நபருக்கு தங்குவதற்காக அனுமதி வழங்கியிருந்தால் அது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு வாடகைதாரர் புகைப்படத்துடன் கூடிய உரிய படிவம் வாயிலாக வீட்டு உரிமையாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் போலீசாரின் தண்டணைக்குள்ளாவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?