Saturday 1 October 2011

ஆசிரியர்கள், அரசு ஊழியருக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு

 
 
 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
 
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக் கேற்ப அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். ஜனவரி 1-ந்தேதியை மையமாகவும் ஜூலை 1-ந்தேதியை மையமாகவும் வைத்து இந்த அக விலைப்படி கொடுக்கப்படுகிறது.
 
கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே பெற்று வந்த 51 சதவீத அகவிலைப்படியுடன் தற்போது உயர்த்தப்பட்ட 7 சதவீதமும் சேர்த்து 58 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறுகிறார்கள்.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டவுடன் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கு எப்போது உயரும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.
 
அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா அகவிலைப்படியை உடனே உயர்த்தி கொடுக்க முடிவு செய்துள்ளார்.
 
நிதித்துறை செயலாளர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்துட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஓரிரு நாட்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
 
தற்போது இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் மத்திய- மாநில தேர்தல் ஆணையத்திடம் அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக அரசு முறைப்படி அனுமதி பெற்றுள்ளது.
 
அகவிலைப்படி உயர்த்தியதற்கான அரசாணையை மத்திய அரசு இன்னும் வெளியிடாததால் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
 
இதன் மூலம் குறைந்த பட்சம் ரூ. 600 முதல் அதிக பட்சமாக ரூ. 5000 வரை சம்பள உயர்வு கிடைக்கும். 13 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் 5 லட்சத்து 50 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் மற்றும் 3 லட்சம் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பயன் அடைவார்கள்




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger