2ஜி ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக பெரிய அளவில் ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி, சிதம்பரத்தையும் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
சிதம்பரத்தை பாதுகாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார். ஆதாரங்கள் பெரிய அளவில் இருந்தபோதிலும் சிதம்பரத்தின் குற்றங்களை மறைக்க அரசு முயற்சித்து வருகிறது. இதுவே இருவேறு அளவுகோல்கள் பின்பற்றப்படுவதை குறிப்பிடுகிறது என பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராசாவுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்ததால் அவர் இப்போது சிறையில் உள்ளார். சிதம்பரத்துக்கு எதிராகவும் ஆதாரம் உள்ளது. அப்படியிருக்க ராசா மட்டும் உள்ளே இருக்கிறார். சிதம்பரம் வெளியே இருக்கிறார். சிதம்பரமும் திகார் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என பிரசாத் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுப்பதை மத்திய அரசு தடுத்து வருகிறது என அவர் கூறினார். ஸ்பெக்ட்ரம் விலையைத் தீர்மானிப்பது ஏன் அமைச்சர்கள் குழுவிடம் இருந்து விலக்கிவைக்கப்பட்டது என்பதற்கு பிரதமர் பதிலளிப்பது மிகவும் அவசியம் என பிரசாத் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மேலும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் பிரதமரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://tamil-video.blogspot.com
http://tamil-video.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?