தமிழ்நாடு தர்மபுரியில் தமிழ் இளையோர் சமூகத்தின் ஏற்பாட்டில் தியாகதீபம் திலீபனின் 24 ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியோடு நினைவுகூரப்பட்டது.
நேற்று முந்தினம் 26-09-2011 திங்கட்கிழமை அன்று தருமபுரி நகரில் அமைந்த்துள்ள இராசகோபால் பூங்கா அருகாமையில் மாலை 5:30 மணிமுதல் நடைபெற்ற இந்த நினைவெழுச்சி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கட்சி, இன மற்றும் மத பேதமின்றி தமிழர் என்ற ஒருமித்த உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் தீயில் தம்மை உருக்கி தியாக வேழ்வியாகிய தியாகிகளுக்காகவும், தமிழீழத்தில் விடுதலைப் போராட்டத்தில் வீரகாவியமாகிய மாவீரர்களுக்காகவும், அனியாயமாக படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்க்ஆகவும், சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இந்த நினைவெழுச்சி நிகழ்வில் தமிழ்ஹ் இளையோர் சமூக உறுப்பினர்கள் மட்டும் 320 பேர் கலந்துகொண்ட்இருந்தமையை காணமுடிந்தது.
அமைதி என்ற போர்வையில் இலங்கத் தீவினுள் பிரவேசித்த இந்திய அமைதிப்படையினர் ஈழத்தமிழர்களையும் ஈழவிடுதலைக்காகப் போராடிய போராளிகளையும் கொடூரமாகக்கொன்றும், எம சக உறவுகளான தமிழீழப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும் படுகொலைகளை அரங்கேற்றிய வேளை கொதித்தெழுந்த தமிழினத்தின் மத்தியில் அகிம்சை ஆயுதத்தை கையில் ஏந்தி காத்தி தேசத்திடம் நீதி கேட்டு 15 / 09 / 1987 அன்று தனது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபந் தொடர்பான விபரங்கள் அடங்கிய 50,000 துண்டுப்பிரசுரங்கள் நிகழ்வு மண்டபத்திலும், வீதிகளிலுமாக மக்களுக்கு தமிழ் இளையோர் சமூகத்தினரால் வழங்கப்பட்டது.
அண்மையிலேயே தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இத் தமிழ் இளையோர் சமூகம் எனும் அமைப்பு துரித கெதியில் வலுப்பெற்ற ஓர் இளையோர் அமைப்பாக வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இளையோர் அமைப்பினரால் அண்மையில் முதலாவது நிகழ்வாக வீரத் தமிழ்மகள் தோழர் செங்கொடிக்கஅன நினைவுவணக்க நிகழ்வு நடாத்தப்பட்டிருந்ததும், தற்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் தம்திசையை திருப்பி அதே உணர்வோடு தியாக தீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வை மிகவும் எழுச்சியாகவும் சிறப்பாகவும் நடாத்தியுள்ள தமிழ்நாடு இளையோர் சமூகத்தினரின் திடீர் வளர்ச்சி கண்டு "கியூ" பிரிவினரும் இளையோரை துருவித் துருவி விசாரணை மேற்கொண்டும் இருந்தனர் என்பது குறிப்பிடத்த்அக்கது.
http://tamil-video.blogspot.com
http://tamil-video.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?