சைவம் திரைப்படத்தை வெளியிட ஏப்ரல் 17-ஆம் தேதி வரை தடை விதித்து 12-ஆவது உதவி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்.ஜி.பிலிம் நிறுவனத்தின் இயக்குநர் பி.ராமதாஸ் தாக்கல் செய்த மனு விவரம்: இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு எங்கள் நிறுவனம் ரூ. 1.5 கோடி நிதி வழங்கி உள்ளது. நாங்கள் அளித்த பணத்தை வைத்து விஜயின் தந்தை ஏ.எல்.அழகப்பன் சைவம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் விஜய் இயக்கியுள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பு பணத்தைத் தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர்.
ஆனால், இசை வெளியீட்டு விழா முடிந்தும் எங்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. தற்போது படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தை வெளியிட்டால் எங்களது பணத்தை திருப்பித் தர மாட்டார்கள். எனவே, எங்களுக்கு பணம் தரும் வரை சைவம் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு 12-ஆவது உதவி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 17-ஆம் தேதி வரை சைவம் படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?