கூடங்குள அணு உலை திறந்தது சரிதான் என்கின்ற மனநிலைக்குதமிழகத்தின் மற்ற பகுதி மக்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது இடிந்தகரையில் சுமார் ஐயாயிரம் மக்களுடன்அணு உலை திறப்புக்கு எதிரானவர்களின் உண்ணாவிரத போராட்டம் நடத்து வருகிறது.
"தமிழக முதலமைச்சரை மட்டுமே நம்பியிருக்கிறோம்"- சமீபத்தில் முதல்வரை பார்த்து விட்டு வந்த பின்னர் கூடங்குள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்சுப.உதயகுமார் சொன்ன வார்த்தைகள் இது.
ஆனால் அரசியல்வாதிகளுக்கே உரிய ராஜதந்திரத்தோடு,அணு உலையை திறந்து விட்டார் ஜெயலலிதா. ஒருவேளை கலைஞர் முதல்வராக இருந்திருந்தாலும்கூட இதை தான் செய்திருப்பார். இருவரின் ராஜ(?!?)தந்திரங்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாககூட தெரியவில்லை.
அணுசக்தியின் ஆக்கம் நாட்டின் நலனுக்� ��ு மிக முக்கியம்என்று 'சாதா' விஞ்ஞானிகளும், 'அரசியல்' விஞ்ஞானிகளும் சொல்லி விட்ட நிலையில், தற்போதுகூடன்குளத்தில், 8வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தை அரசும், ஒரு சில பத்திரிக்கைகளும் கையாண்ட விதம் சரியா என்பதைஆராய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.
"அணு உலை ஆபத்தில்லை என்று சொல்பவர்கள் தங்கள்ஊ ரில் அணு உலையை அமைத்துகொள்ள முன் வருவார்களா?" என்ற அந்த பகுதி அப்பாவி மக்களின்ஐயம் அர்த்தமுள்ள கேள்வியாகவே தெரிகிறது.
தங்கள் வாழ்வாதாரம் அழிந்து விடுமோ என்று அச்� ��ம்கொள்கின்ற சாமானிய மக்களின் ஐயத்தை நீக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை அல்லவா?
ஆரம்பத்தில் போராட்டத்தை ஒடுக்க போராட்டத்திற்குமதசாயம் பூச நினைத்தார்க� ��். இயலவில்லை.
அடுத்து போராட்டக்காரர்கள் வெளிநாட்டு சக்திகளின்கைக்கூலிகள் என்றார்கள்.
வெளிநாட்டு நிதியுதவியின் மூலமாக தான் இந்த மக்களின்போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக சொன்ன அதே மத்திய (உளறல் துறை) இணை அமைச்சர் நாராயணசாமி..,சில நாட்களுக்கு பிறகு, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குநிதியுதவி வந்தது பற்றி இது வரை நிரூபிக்க இயலவில்லை என்று மாநிலங்கவையிலேயே பல்டிஅடித்தார்.
இந்த பருப்பு எல்லாம் வேகாமல் போனதால், இப்போது"நக்சலைட் பின்ணணி" என்ற பீதியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
மேற்கு வங்களத்தின் நந்திகிராம் கிராமத்தில், டாடாநானோ தொழிற்சாலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்திய போது, அந்த போராட்டம் நீண்டநாள்களுக்கு இடைவெளியில்லாமல் நடந்ததற்கு நக்சலைட்கள் தான் காரணம்., அதே போன்று இடிந்தகரைமக்களுக்கு நக்சலைட்டுகள் பின் புலமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்அளவுக்கு நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை தமிழக அரசு ஒப்புக்கொள்ளுமா?
அப்படியெனில் தமிழகத்தில் நக்சலைட்டுகளே இல்லை என்றதமிழக காவல் துறையின் வாதம் பொய்யா?
இதில் தினமலரின் கடுமையான தாக்குதல் பிரச்சாரம்வேறு. உண்மையின் உரைக்கல் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள், போராட்டக்காரர்களை"உதயகுமார் கும்பல்" சொல்லுவதும், தினமும் போராட்டக்காரகளைப் பற்றி ஜோசியம் சொல்வதும், அபாண்டபழிகளை சுமத்துவதும் நியாயமான முறையாகத்தெரியவில்லை.
இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் பாணியில் இடிந்தகரையில்காவல்துறை குவிப்பு, ராதாபுரம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு, வஜ்ரா போன்ற பாதுகாப்புவாகனங்கள் அணிவகுப்பு போன்ற அத்துணை விஷயங்களையும் தாண்டி போராடிக்கொண்டிருக்கும் அ ந்தபகுதி மக்களின் வாழ்வாதார, ஜீவாதார பயத்தை நீக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
அணு உலையை ஆதரிக்கும் மக்கள் கூட, அறவழியில் போராடும்மக்கள் மீது திணிக்கப்படும் கொடுமைகளை கட்டாயம் கண்டிக்க வேண்டும்.
சில நாட்கள் மின்தடையால் வெப்பத்தில் புழுங்கியதற்கே,"ஐய்யோ அணு உலை தேவை" என கூக்குரலிட தொடங்கிய நமக்கு, வாழ்க்கைப்போராட்டத்தை,உயிர் வாழும் உரிமைக்காக போராடும் கிராம மக்களின் போராட்டத்தை கிண்டலடிக்க என்ன தகுதிஇருக்கிறது?
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?