Monday, 26 March 2012

யேர்மனியில் நடைபெற்ற "தியாகச் சுடர்கள்" வீரவணக்க நிகழ்வு



தமிழீழ விடுதலையினை வென்றெடுக்கும் போராட்டத்திற்கு, பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் தமது உயிரை ஈகம் செய்த தியாகிகளிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று யேர்மனி பீலபெல்ட் நகரில் வெகு சிறப்� �ாக நடைபெற்றுள்ளது.

1995 ஆம் ஆண்டு தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத மிகப்பெரும் இடப்பெயர்வை யாழ். மக்கள் சந்தித்ததுடன், விடுதலைப் போராட்டமும் காடுகளால் சூழப்பட்ட வன்னிப் பகுதிக்குள் நகர்த்த, வரலாற்றால் நிர்ப்பந்திக்கப்பட்டது.

இந்நிகழ்வு சாதாரண நிகழ்வாக அமைந்துவிடவில்லை. தமிழர்களின் விடுதலைப் போராட்டமே முடிந்து போய்விட்டதாக எல்லோராலும் கருதப்பட்டது. � ��ன் உலக இராணுவ அரசியல் ஆய்வாளர்களால் கூட விடுதலைப்புலிகள் இனி அவ்வளவுதான் அவர்களை நம்பிய தமிழர்களின் கதி அதோகதிதான் என அடித்துக் கூறுமளவிற்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்ட நிகழ்வாகும்.

உலகத் தமிழர்களை நிலைகுலைய வைத்த இந்நிகழ்வின் தாக்கத்தால், தமிழகத்தில் ஒரு உயிர் வெளி உலகிற்குத் தெரியாமல் இழக்கப்பட்டிருந்தத� �. அப்போது தமிழகத்து ஊடகங்கள் ஈழப் பிரச்சினையினை அவ்வளவாக கண்டு கொள்ளாத காலமாகவும், ஜெயலலிதாவின் கடுமையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த காலமாகவும் இருந்தமையால், அப்துல் ரவூப் என்கின்ற தமிழனின் தியாக மரணம் உலகம் கண்டுகொள்ளாமல் போன துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

2009 சனவரி 29 அன்று வன்னியில் தமிழினம் மாபெரும் இனச்சுத்திகரிப்பை நோக்கி தள்ளப்பட்டது கண்டு அதனை தமிழ� �ம் இந்தியா உள்ளிட்ட உலகம் கண்டு கொள்ளாது சிங்களத்தை ஊக்குவித்து வருவதை கண்டித்து, தனது ஒப்பற்ற உயிரை தீச்சுவாலைக்கு கொடுத்த நெருப்புத் தமிழன் முத்துக்குமார் வரலாறாகிப் போயிருந்தான்.

முத்துக்குமார் வழியில் தமிழகத்தில் மேலும் 15 தமிழர்கள் தீச்சுவாலைகளை மேனி படரவிட்டு தமிழன அழிப்பை தடுக்க முற்பட்டு தியாக வரலாறு படைத்திருந்தனர்.

முத்துக்குமார் தமிழகத்த ில் கொதிநிலையினை ஏற்படுத்தியிருந்த சமயத்தில், மலேசியாவிலும் தமிழ்ச் சகோதரர்கள் இருவர் தமதுயிரை இனவிடுதலைக்காக ஈகம் செய்தார்கள்.

உலகின் மனச்சாட்சியின் இருப்பிடமாக கருதப்படும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்னால், ஐரோப்பாவை சூழ்ந்து கொண்டிருந்த பனிப்படலத்தையும் வல்லரசுகளின் கண்ணை மறைத்து நின்ற வல்லாதிக்க நலனையும் அகற் றுவதற்காக தீச்சுவாலையினை மேனி படரவிட்டு உலகத்தின் முகத்திரையினை கிழித்து வரலாறுபடைத்தான் நெருப்புத் தமிழன் முருகதாசன்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருபது ஆண்டுகளிற்கு மேலாக நீதி மறுக்கப்பட்டு, சோனியாவின் பழிவாங்கும் நிலைப்பாட்டின் நிகழ்கால சாட்சிகளாக விளங்கிக் கொண்டு இருக்கும் அருமைச் சகோதரர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோ� ��ின் தூக்கு உறுதிப்படுத்தப்பட்டு, உலகத்தமிழினமே ஆடிப்போயிருந்த நிலையில் தீச்சுவாலை தனது உடலை பற்றிக்கொள்ள அனுமதித்து சகோதரி செங்கொடி தீக்குளிப்பு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை திறந்துவைத்து சரித்திரமாகியிருந்தார்.

இப்படி தமிழின விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தீக்குளித்து வரலாறாகிப் போன தியாகச்சுடர்களிற்கு ஒருங்கே வீரவணக்கம் செலுத்தி நினைவில் ந� �றுத்தி, ஆராதிப்பதற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி கிளை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று மதியம் 2மணியளவில் ஆரம்பித்த வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியோடு நடைபெற்றுள்ளது. நிகழ்வின் ஆரம்பமாக தமிழீழத் தேசியக் கொடியினை பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் சகோதரர் திருமலைச்செல்வன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அகவணக்கத்தை தொடர்ந்து, ஈகைச்சுடரினை மனிதநேய செயற்பாட� ��டாளர் ரூபன் அவர்களும் பீலபெல்ட் இளையோர் அமைப்பை சேர்ந்த செல்வன் ஜெனா அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பொதுச்சுடரினை செல்வன் ம.நிலவன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து மலரஞ்சலியும் இடம்பெற்றதையடுத்து, இளஞ்சூரியன் இசைக்குழுவினரின் இசைவணக்கம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக விடுதலை நடனங்கள், நாடகங்கள் என்பன மிகுந்த எழுச்சியுன் நடைபெற்றன. நிகழ்வில், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திருமலைச்செல்வன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

இன்று தமிழினத்தின் விடுதலைக்களம் ஜெனீவாவில் புதிய வடிவெடுத்து நிற்கின்ற வேளையில், தீக்குளித்து வரலாறாகிப்போன நெருப்புத் தமிழர்களை நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தியது முக்கியத்துவம் பெபற்றுள்ளது. இந்த வீரவணக்க நிகழ்வில் யேர்மனிவாழ் ஈழத் தமிழர்கள் பலர் கலந� ��து கொண்டு தமது வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger